Total Pageviews

Friday, November 22, 2013

கல்வெட்டுக்கள்

கொங்கு வேளாளர்
கவுண்டர் என பொதுவாக அழைக்கப்படும் கொங்கு வேளாளர் இனம் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் தமிழைத் தாய் மொழியாக கொண்ட ஒரு சமுதாயமாகும். கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ளகள். தமிழகத்தில் இவர்களை பொதுவாக கவுண்டர் சமுதாயம் என்றும் கொங்கு சமுதாயம் என்றும் அழைப்பர்.கவுண்டர் என்ற சொல்லுக்கு நிலத்தை, மக்களை, நாட்டை காப்பவன் என்று பொருள்.
கவுண்டர்கள் இன்று பெருமளவு விவசாயம் மற்றும் தொழிற்றுறையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் கவுண்டர்கள், திண்டுக்கல்கோயம்புத்தூர்தர்மபுரிஈரோடுகரூர்,கிருஷ்ணகிரிநீலகிரிசேலம்நாமக்கல்திருப்பூர் மாவட்டங்களில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.
http://kongucheramanperumal.blogspot.com/2014/07/blog-post.html
 http://kongupattakarars.blogspot.in/2011/03/blog-post_1440.html



பொருளடக்கம்

  [மறை


கலவெட்டுக்கள்

பண்டைய வரலாற்றைத் தெரிந்துகொள்ள உதவும் பல்வேறு சான்றுகளில் கல்வெட்டுக்கள் மிக முக்கியமானவை.கல்லில் வெட்டப்பட்ட எழுத்துக்களைக் கல்வெட்டுக்கள் என்று கூறுகிறோம்.கல்லில் எழத்துக்களைப் பொறித்தால் அவை அழியாமல் நிலைத்து நிலைத்துநிற்கும் என்பதை முன்னோர் கண்டனர்
இளமையில் கல்வி சிலையில் எழதது
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபதேசம்
கல்மேல் எழுத்துப்போல காணுமே

கல்வெட்டுக்களின் சிறப்பு

ஏறக்குறைய 2 ஆயிரம் ஆண்டுகாலக் கொங்கு வேளாளர்களின் வாழ்வியல் முறையைத் தெரிந்துகொள்ள இக்கல்வெட்டுக்கள் பெரும் துணை புரிகின்றன. அவர்களின் வேளாண்மை, பொருளாதார நிலை, அரசர்களிடம் பெற்ற சிறப்பு, சமுதாயத்தில் அவர்களுக்குள்ள பங்கு, பெண்கள் நிலை, சமயவாழ்வு, கலையுணர்வு, மொழிப்பற்று, பிற சமுதாய உறவுகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள இக்கல்வெட்டுக்களே தக்க சான்றுகளாகத் திகழ்கின்றன. சமூகவியல் ஆய்வாளர்கட்கும், கொங்கு வேளாளர் பற்றிய வரலாற்று .

கொங்கு வேளாளர் பெயர் அமைப்பு
 இக்கல்வெட்டுக்களில் கொங்கு வேளாளர் பெயர் கூறும் போது நாடு, ஊர், குலம், பெயர், சிறப்புப் பெயர் 
ஆகிய வரிசையில் கூறப்பட்டுள்ளன. 
"குறுப்புநாட்டு விசயமங்கலத்து வெள்ளாளன் சாத்தந்தைகளில் சிறியான் தேவன் ஆன முடி கொண்டசோழ மாராயன் "
"வடபரிசார நாட்டு நம்பி பேரூரில் வெள்ளாளன் சோழரில் தேவன் ராசராசன்"என்பன போல வரும். வேந்தர் குலத்தாரும், பில்ல குலத்தாரும் தங்கள் குழந்தைகட்கு வேந்தன், பிஸ்லன் என்றே பெயர் வைத்திருப்பதைக் கல்வெட்டு மூலம் அறிகின்றோம். பிற்காலப் பெயர்கள் பெரும்பாலும் தெய்வப் பெயர்களாகவும், முன்னோர் பெயர்களாகவும் உள்ளன.
"வெள்ளாளன் காடர்களில் நக்கன் அரையன் சுந்தரதேவன் ’’
"வெள்ளாளன் சாத்தந்தைகளில் சிறியான் தேவன்’’

என்றால் வேளாளர் காடை குலத்தைச் சேர்ந்தவர்களில் நக்கன் அரையன், வேளாளர் சாத்தந்தை குலத்தார்களில் சிறியான் தேவன் என்பது பொருள். இதன் பொருள் புரியாமல் ஆய்வாளர் ஒருவர் காடர்கள், சாத்தந்தைகள், கண்ணர்கள் என்பதே குலப் பெயர் என்று தவறாக எழுதியுள்ளார். இடைக்காலக் கல்வெட்டுக்களில் குலத்தின் பெயர் கூறி தொடர்ந்து குலம் என்ற சொல்லை இணைப்பதில்லை. சாத்தந்தை குலம் என்று கூறாமல் சாத்தந்தைகளில் என்று மட்டும் கூறப்பெற்றிருக்கும். பிற்காலக் கல்வெட்டுக்களில் தான் குலம் என்றும், கூட்டம் என்றும், கோத்திரம் என்றும் குறிக்கப்பெற்றிருக்கும். இவை மூன்றும் ஒரே பொருள்தரும் சொற்களாகும். பெண்கள் கொடைகொடத்தலைக் கூறும் கல்வெட்டுகளில் அவர் இன்னாருடைய மனைவி என்று சுட்டிக் கூறப்பெற்றிருக்கும். “பூந்துறை நாட்டு இளம்பள்ளியில் வெள்ளாளர் காடைகளில் அவிநாசி தேவன் மனைக்கிழத்தி தேவன் சொக்கி” என்பது போல் குறிக்கப்பெறும். இக்கால வழக்கப்படி கணவன் பெயர் மனைவி பெயரோடு குறிக்கப்பட்டுள்ளதையும் காணலாம். தேவன் மனைவி “தேவன்சொக்கி” என உள்ளது.
மனைவியைக் குறிக்க கணவர் பெயருடன் மனைக்கிழத்தி, மணவாட்டி, தேவி, அகமுடையாள், வாழ்க்கைப்பட்ட என்ற சொல் சேர்க்கப்பெற்றிருக்கும். “வடபரிசார நாட்டில் காரைப்பாடியிலிருக்கும் வெள்ளாளன் கொற்றந்தைகளில் அன்னி காவன் மனைக்கிழத்தி கேசி” என்பது போல வரும். சில கல்வெட்டுகளில் பெண்ணின் தந்தை பெயரும் கூறப்பட்டிருக்கும். “வெள்ளாளன் ஆவகளில் வீரகாமிண்டன் உடையாண்டான் மனைக்கிழத்தி வாமதேவன் மகள் பிள்ளையம்மை” என்பது போலப் பெயர் சில இடங்களில் அமைந்துள்ளன. சிலரது பெயர்களில் அவர்களை அடையாளம் காட்ட அவர்களின் தொழில் முதலியவை கூறப்பெற்றிருக்கும்.

உருளிக்காரப் பெரியணகவுண்டர் (ஊதியூர்)
கவுமாரன் கருப்பகவுண்டர் (கொளாநல்லி)
கிழக்குப் பண்ணயம் கருப்பண கவுண்டர் (மூலனூர்)
கொத்துக்கார ராக்கியன் (கீரனூர்)
பண்டிதகாரச் சின்னயகவுண்டன் (ஊதியூர்)
பள்ளிக்கூடத்துக் கவுண்டர் (ஆரியூர்)
பூசாரி கருப்பணகவுண்டர் (ஆரியூர்)
மணியம் வஞ்சியப்பகவுண்டர் (ஆரியூர்)
வில்லமரத்து நல்லிக்கவுண்டர் (கூத்தம்பூண்டி)
தர்மகர்த்தா நமசிவாயக் கவுண்டர் (ஏழூர்)

என்பனபோல அவை அமையும். கொளாநல்லி, கூனவேலம்பட்டி, குருசாமிபாளையம், சித்தளந்தூர் போன்ற ஊர்களில் கொங்கு வேளாளர் சிலர் பெயர் துலுக்கணகவுண்டர் என்று காணப்படுகிறது. கொளாநல்லியில் துலுக்கணசாமி கோயிலும் உள்ளது. கொல்லன்கோயில் வெண்டுவகுத்தலார் ஒருவர் இராவுத்தப் பெருமாள் என்று அழைக்கப்பெறுகிறார். இராவுத்தர் என்பது அரேபியக் குதிரை வணிகரைக் குறிக்கும் (ரவுத் - ராவுத்தர்). இருப்புலி, கொளாநல்லி போன்ற ஊர்களில் கொங்கு வேளாளகவுண்டர்கள் மனைவியர் கவுண்டச்சி என அழைக்கப்பெற்றுள்ளனர். வடபரிசார நாட்டில் துலுக்கன் புத்தூர் என்ற ஊர் உள்ளது.
சில கொங்கு வேளாளர் பெயர்கள் பொருள் ஆழம் மிக்க காரணப் பெயர்போல் அமைந்துள்ளது. சார்ந்தாரைக் காப்பான், அடியார்க்கு அடியான், நல்லிசையாளன், அஞ்சாதான், பிறவிக்கு நல்லார், உள்ளநெறி காட்டினான், பொய்யாத் தமிழ் நம்பி, இனிய பிள்ளை, தப்பிலா வாசகன் என்பன அவற்றுள் சில.

சிறப்புப் பெயர்கள்

சிலரது பெயர்களில் இயற்பெயரோடு இணைந்து அரசு, ஆட்சியோடு தொடர்புடைய பெயர்கள் காணப்படுகின்றன. அவர்கள் அரசரோடும், நாட்டு நிர்வாகத்தோடும் தொடர்பு கொண்ட உயர் அலுவலராக இருந்துள்ளனர் என்பது தெளிவு.
கோதைமங்கலமான மடிகட்டளத்திலிருக்கும்(ராணுவ பாசறையில்) வெள்ளாளன் வீர நாரயணன் "மூலபல படை வளவன்" செம்பியன் காமிண்டன் - ARE 1905 S.no:711
அவிநாசி முதலியான சோழநாராயணக் காமிண்டன் (மூல குலம்)
அழகிய சோழக் காமிண்டன் (கண்ணகுலம்)
சிறியான் ஆனசெயங்கொண்ட சோழக் காமிண்டன் (தேவவேந்திர குலம்)
சோழக் காமிண்டன் மன்றாடி (மலையர் குலம்)
துட்டன் செல்வன் அமரவிடங்கப் பல்லவரையன் (வெள்ளாளன்)
நம்பி கரியான் அபிமான சோழன் (கடத்தூர் வெள்ளாளன்)
பெரியான் பிள்ளன் ஆன செயங்கொண்ட சோழக் காமிண்டன் (வெண்டுவ குலம்)
மணியனான இராசராசப் பல்லவரையன் (பூச்சந்தை குலம்)
மன்றாடி மூக்கன் சாத்தன் ஆன இராசேந்திர சிங்கக் காமிண்டன் (செல்வ குலம்)
வீரசோழகங்கன் (பயிர குலம்)
வீர சோழக் காமிண்டன் (சாத்தந்தை குலம்)
அரசன், அரையன், மாராயர் என்பதும் அரசர்கள் அளிக்கும் உயர்பட்டங்கள் ஆகும். சிலர் அப்பெயர் பெற்றுள்ளனர்.
அய்யன் அரைசன் (கோட்டாறுகுலம்)
அரையன் காமிண்டன் விக்கிரமன் (பேரூர் வெள்ளாளன்)
அரையன் காவன் (மாடைகுலம்)
சிறியான் தேவனான முடிகொண்ட சோழ மாராயன் (சாத்தந்தை குலம்)
அதிசய சோழ அரைசன் ஆன மணிகைராயர் (குழாயர் குலம்)
ஆடன் புளியனான மும்முடிச் சோழ மாராயன் (காடை குலம்)
அரையன் சிறியான் ஆனவேந்த சூளாமணிப்பல்லவரையன் (பூசகுலம்)
அரையன் காமிண்டன் விக்கிரமன் (பேரூர் வெள்ளாளன்)
பன்றன் மாராயனான தென்னவன் மூவேந்த வேளான் (மணியன் குலம்)
கொன்றன் ஏகவீரமாராயன் (செல்லன் குலம்)

சிவபக்தர்கள்

சோழநாடு, தொண்டை நாடு, பாண்டிய நாடு போலக் கொங்கு நாட்டில் இடைக்காலத்தில் பக்தி இயக்கம் பெரிதும் பரவியிருக்கவில்லை என்ற கருத்தைப் பலர் கூறிவருகின்றனர். அக்கருத்து தவறு என்று நிறுவும் வண்ணம் பல கொங்கு வேளாளர் பெயர்கள் சைவ சமயம் தொடர்பான பெயர்களுடனும், சமய அடியார்கள் பெயருடனும் காணப்படுகின்றன. கொங்கு வேளாளர்கள் பலருடைய கல்வெட்டுக்கள் சிவமயம் என்ற மங்கலச் சொல்லோடு தொடங்குகிறது. மொஞ்சனூர் தேவேந்திர குலத்தாரும், தனஞ்செய குலத்தாரும் தங்களை சைவ வேளாள சாதி என்று குறிப்பிட்டுக் கொள்கின்றனர். பருத்திப்பள்ளிச் செல்ல குலத்தார் ஒருவர் சிவபக்தர் அத்தாணிக் காமிண்டர் என்று அழைக்கப்பெறுகிறார். கீழ்வரும் பெயர்கள் சைவ சமயச் சிறப்புள்ளவை.
ஆண்டானான அம்பலப் பெருமாள் (வெண்மணிகுலம்)
கருங்காள மண்டலிகசுவாமியான மன்றுளாடுவான் (குண்டெலி குலம்)
தர்மகர்த்தா நமசிவாயக் கவுண்டர் (பண்ணை குலம்)
கொன்றைவார் சடையன் (பெரிய குலம்)
சிவபாதசேகர மூவேந்த வேளாண் (கோனாபுரம் வேளாளர்)
நம்பி நம்பியான நல்லமங்கை பாகன் (பெரிய குலம்)
நம்பியான மங்கைக் கூத்தன் (பெரிய குலம்)
பிள்ளை பிள்ளையாழ்வியான பிறை சூடும் பெருமாள் (ஆந்தை குலம்)
பொல்லாத பிள்ளை (பெரிய குலம்)
பொன்னம்பலம் சன்னதி நிறைந்தான் (செம்பூத்த குலம்)
வள்ளி மருதூருடையான் மானேந்தியகையன் (சேலம் வெள்ளாளர்)
தேவன் கூத்தப்பெருமாள் (படைத்தலைவர்)
என்பன சைவ சமயத்தோடு தொடர்புடைய பெயர்கள். சமய அடியார்கள் வரலாறும், பெரியபுராணப் பயிற்சியும் கொங்கு நாட்டில் இருந்துள்ளதைப் பின்வரும் பெயர்கள் காட்டுகின்றன.
சிறுநம்பி நம்பியான நம்பியாரூரன் (பெயரி குலம்)
சேரமான் தோழனான தொண்டைமான் (பில்ல குலம்)
சேரமான் பெருமாள் பிறவியான் (ஆந்தை குலம்)
ஆண்டியான மங்கையர்க்கரசி (சாத்துவாய் குலம்)
திருச்சிற்றம்பல முடையான் அம்மை அப்பனான தம்பிரான் தோழன் (பூச குலம்)
காவனூர் உடையான் மாணிக்கவாசகன் (கருப்பூர் வெள்ளாளன்)
தோழன் பிள்ளனான ஞானசம்பந்தன் (பெரிய குலம்)
நம்பி நம்பியான பிள்ளை ஞானசம்பந்தன் (பெரிய குலம்)
மஞ்சனான காளியான் காழி ஞான சம்பந்தன் (செம்பூத்த குலம்)
முனையடுவார் (கண்ண குலம்)

இத்தொகுப்பிலுள்ள கொங்கு வேளாளர் கல்வெட்டுக்கள் சிலவற்றில் பறையன் என்ற சொல் கொங்கு வேளாளர் பெயரோடு இணைந்து வருவதைக் காணலாம். இதை மேலோட்டமாகப் பார்த்த தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் இருபெரும் சமூகத்தையும் ஒன்றுபடுத்திக் கூறியுள்ளார்.
திருமுருகன் பூண்டியில் உள்ள கொங்கு மன்னன் விக்கிரமசோழனின் 12 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் கொடை கொடுத்தவர் பெயர் “வெள்ளாளர் மாப்புள்ளிகளில் சோழன் பறையன் ஆன தனபாலன்” எனக் குறிக்கப்பெறுகிறது. இவர் திருமுருகன் பூண்டிக் கோயிலுக்கு நாள்தோறும் அமுதுபடிக்காக நாழியரிசி கொடையாகக் கொடுத்துள்ளார்.
அதனை கோயில் காணியுடைய சிவப்பிராமணர்கள் பெற்றிருக்கின்றனர். இப்பெயரில்,
சமூகப் பெயர் - வெள்ளாளன்
குலப்பெயர் - மாப்புள்ளி
இயற்பெயர் - தனபாலன்
வெள்ளாளரில் மாப்புள்ளி குலம் சேர்ந்த தனபாலன் சோழன் பறையன் என்ற பட்டப்பெயரைப் பெற்றுள்ளான். அரசால் அல்லது சபையால் அல்லது ஊராரால் அவன் சோழன் பறையன் என ஆக்கப்பட்டுள்ளான் என்பதை ஆன என்ற சொல் விளக்குகிறது. பறையன் என்பது இங்கு அரசு சார்ந்த ஒரு பட்டப்பெயரே தவிர இயற்பெயர் அல்ல.
சோழன் புகழைப் பரப்புபவனாகவோ அல்லது பறை முதலிய கருவிகள் இயக்கத்தின் தலைவனாகவோ அவன் இருக்கலாம். உடுமலை வட்டம், சோழமாதேவியில் இதே விக்கிரம சோழனின் 20 ஆம் ஆட்சியாண்டுக்கல்வெட்டில் தன் சிறிய தாயாருடன் சேர்ந்து கோயிலுக்கு நிலைகால் அளித்த பெண்ணின் பெயர் “பறையன் ஆளுடைய நாச்சி” என்பதாகும். எனவே பறையன் என்பது சோழர் காலத்தில் கொடுக்கப்பட்ட உயர்பட்டப் பெயர் என்று தெரிகிறது. அது குலப்பெயர் அல்ல.

ஆட்சியுரிமை

கொங்கு வேளாளர் பலர் அரசர்கள் சார்பில் ஊர், நாட்டு நிர்வாகம் செய்துள்ளனர். பூந்துறை, கீரனூர் போன்ற பல ஊர்களில் தாங்கள் வசூலிக்கும் சுங்கம், மகமை போன்றவற்றால் வரும் பொருளைக் கோயிலுக்குக் கொடையாக அளித்துள்ளனர். பல ஊர்களில் ஊர் முழுவதும் (எல்லா வரிகளும்) அவர்களால் ஆலயங்கட்டுக் கொடையாக அளிக்கப்பட்டுள்ளன.
இதனால் கொங்கு வேளாளர் பெருமக்கள் ஆட்சியில் பல தனி உரிமைகளையும் பெற்றிருந்தனர் என்பது விளங்குகிறது. கொங்காள்வான், கொள்காள்வி, ஊராளி, ஊராண்டான், நாட்டுக்காமிண்டன், நாடுகொண்டான், அதிபன், மன்றாடி, அரசன், அரையன் போன்ற பல பெயர்கள் அவர்களின் ஆட்சியுரிமையைக் காட்டுகிறது. இறுதியில் அளிக்கப்பட்டுள்ள காணிப்பாடல்கள் பலவற்றில் ஆட்சி உரிமை குறிக்கப்பட்டுள்ளது.
Add caption
Narapathi means King , Vellala Kongalvan ,  
 1. மாவண்டூரான எறிவீரபட்டணம் வெள்ளாளன் 
செம்பரில் செல்வனான நரபதிக் கொங்காள்வான்
  2. வடபாரிசநாட்டு ஒத்தனுரான பெரும்பழனத்து 
வேளாளத்தேவாத்தைகளான சிறியான் 
ஜெயங்கொண்ட சோழக்காமிண்டன்

காலிங்கராயன்

காலிங்கராயன் என்பது அரசர்கள் அளிக்கும் மிக உயரிய விருதுப் பெயராகும். வெள்ளோடு கனகவுரம் சாத்தந்தை குல லிங்கையன் வீரபாண்டியனால் காலிங்கராயன் என்ற பட்டம் பெற்றான். தனிப்பாடல் காலிங்கராயனை வீரபாண்டிய வேந்தமைச்சன் என்று கூறுகிறது. காலிங்கராயனுக்கு உத்தர மந்திரி என்ற பட்டமும் உண்டு. இவர் போல் இடிகரை கொற்றந்தை குல அமரபுயங்கன், பிள்ளையான் ஆகியோர் காலிங்கராயன் பட்டம் பெற்றுள்ளனர். காஞ்சிக்கோயில் செல்லகுல இளச்சியும், ஆதியூர்க் குண்டெலிகுலக் காளி என்பவரும் காலிங்கராயன் பட்டம் பெற்றுள்ளதாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. வடகரைக்கவுண்டர்களில் வெள்ளாளன் கணவாளரில் உடையாண்டானான அழகப்பெருமாள் காலிங்கராயன் பட்டம் பெற்றிருந்தார்.

மாளவராயன்

தமிழரசர் மந்திரி சேனாதிபதிகளுக்குக் காளிங்கராயன் மாளவராயன் (மழவராயன்) என்னும் பட்டங்கொடுப்பதுண்டு. காங்கேய நாட்டு மயிலிரங்கம் வைத்தியநாதர் கோயில் சாஸனத்தில்,
" ...... காணியாளர் காவிலவரில் பிறை சூடி வீரப்பெருமாள் ரோகாவும், வேளாளர் ஆந்தைகளில் சேருமா பிறவியாரும் மாடைகளில் மாளவராயர் அவிகை மழவராயரும் ..... " என்றிருப்பதாலறியக் கிடக்கின்றன

புலிகுத்தி நடுகல்

வேந்தர் குலம் செய்தி:வடபரிசார நாட்டு வெள்ளாதி வெள்ளாளர் வேந்தரில் நயினார் மாலை ஆண்டான் புலியைக் கொன்று வீரமரணம் அடைந்தான்.


ஒரு தோட்டத்தில் அமைந்துள்ள நடுகல் சிற்பத்தைக்காணச்சென்றோம். இந்த நடுகல் சிற்பம் புலிகுத்திக்கல் என அழைக்கப்படுகிறது. கல்வெட்டுடன் கூடிய இந்நடுகல் பற்றி மேற்சுட்டிய தொல்லியல் துறைக்கல்வெட்டு நூலில் (தொடர் எண்: 936/2003) குறிப்பிடப்பெறுகிறது. மறவர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டதைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. போரில் இறந்துபட்ட வீரர்களுக்கும், முல்லை நிலப்பகுதியில் ஆனிரை கவர்தலிலும், மீட்டலிலும் ஈடுபட்டு இறந்த வீரர்களுக்கும் நடுகல் நட்டு மக்கள் வணங்கினர். (ஆனிரையில் ஆடுகளும் அடங்கும் எனலாம்) கோவைப்பகுதி பழங்காலத்தே பெருமளவில் முல்லை நிலப்பகுதியாக விளங்கியமையால் பட்டிகளில் ஆனிரை காத்த வீரர்கள் ஆடுமாடுகளைத் தின்னவரும் புலிகளுடன் போரிட்டு மடிவதுண்டு. (புலியைக்கொன்ற பின்னரே வீரன் மடிகிறான்) அத்தகைய வீரர்களுக்கு நடுகல் எடுத்து வணங்கினர். கோவைப்பகுதியில் இவ்வகை நடுகற்கள் புலிகுத்திக்கல் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறன. இக்கற்களில் வீரன் புலியைக் குத்திக்கொல்லும் காட்சி புடைப்புச்சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கும். இந்நடுகற்கள் பெரும்பாலும் எழுத்துகள் பொறிக்கப்படாமல் இருக்கும். அரிதாகச் சில நடுகற்கள் எழுத்துப்பொறிப்பைக்கொண்டிருக்கும். நாங்கள் பார்த்தது எழுத்துடைய நடுகல்.
நல்ல வெண்மையான நிறத்துடன் ஏறத்தாழ நான்கு அல்லது நாலரை அடி உயரத்தில் உள்ள இக்கல்லில் வீரன் புலியுடன் போரிட்டுக் கொல்லும் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் கீழே ஆறுவரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. வீரனின் தலையில் தலைப்பாகை; காதுகளில் காதணிகள்; கழுத்திலும் அணிகள். கைகளில் தோள்வளை காணப்படுகிறது. வீரனின் இடைப்பகுதியில் இடைக்கச்சு. கால்களில் கழல்கள். வீரன் தன் வலக்கையால் நீண்ட வாளைப் புலியின் நடுமார்பில் பாய்ச்சிய நிலையில் வாள் புலியின் உடலைக் குத்தி உடலின் மறுபுறம் வெளிவந்த தோற்றம். இடக்கை புலியின் முகத்தருகே நெருங்கிய நிலையில் கைவிரல்கள் தோன்றாதவாறு காணப்படுவதால் இடக்கையில் இருந்த குறுவாள் புலியின் வாய்ப்பகுதியில் நுழைந்துவிட்டது புலனாகிறது. இடைக்கச்சில் குறுவாள் காணப்படாதது இதை உறுதிப்படுத்துகிறது. (வீரர்களின் சிற்பங்களில் இடையில் குறுவாள் தப்பாது இடம் பெறுகிறது.) புலி நின்ற நிலையில் ஒரு காலை வீரனின் தொடைப்பகுதியில் தாக்குகிறது. புலியின் நிமிர்ந்து நிற்கும் வால் புலியின் சினவெறியைக்காட்டும் எனக் கல்வெட்டு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

கல்வெட்டில், வடபரிசார நாட்டுப் பெள்ளாதியில் இருக்கும் வேந்தர் குல வெள்ளாளன் நயினார் மாலை ஆண்டான் என்பவன் பெயர் காணப்படுகிறது. விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் பெயரும் தமிழ் ஆண்டு வட்டத்தில் தாது வருடமும் குறிப்பிடப்படுகிறது. கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்காலம் கி.பி. 1509-1529 என்பதாலும் தாது வருடம் கி.பி. 1516-ஆம் ஆண்டில் பிறப்பதாலும் இந்நடுகல்லின் காலம் கி.பி. 1516 ஆகும்.

கல்வெட்டுப்பாடம்

வரி 1 ஸ்வஸ்திஸ்ரீமந் மஹாமண்டலேஸ்வர
வரி 2 ன் வீரகிருஷ்ணராயற்குச் செல்லாநின்ற
வரி 3 தாது வருஷம் ஆவணியில் வடபரிசார நா
வரி 4 ட்டில் வெள்ளாதியில் வெள்ளாழன் வே
வரி 5 ந்தர்களில் நயினார் மாலை ஆண்டா
வர் 6 னேன்

வேள், வேளிர், வேளான்

வேள், வேளிர் என்பது ஆட்சித் தலைவர்கட்கு உரிய பெயர். வேள்பாரி, வேள் பேகன் என்பன அவ்வாறு சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்த குறுநில மன்னர்கள். வேள்-வேளிர் என்றும் கூறப்பெறும். பலகொங்கு வேளாளர்கள் வேள் பட்டம் பெற்றுள்ளனர். அவர்கள் ஆட்சியாளர்கள் என்பதில் ஐயமில்லை. அவர்கள் அரசனால் சிறப்பிக்கப்பட்டவர்கள். வேளாளர் தலைவர்கட்குத் தமிழக அரசர்கள் மூவேந்தவேளான் என்ற பட்டப்பெயர் கொடுப்பது வழக்கம்.
ஆடன் புளியனான உத்தமசோழத்தமிழ வேளான் (காடை குலம்)
இளைய செல்ல நாயனான வஞ்சிவேளான் (அந்துவகுலம்)
கேசன் காவனான தமிழவேளான் (மலையர் குலம்)
கொங்கு வேல் தரையர் (பயிர குலம்)
வெள்ளாளன் மூவேந்த வேளான் (கோனாபுரம்)
நேரிய மூவேந்த வேளான் (படைத்தலையர்)
தமிழவேளான், பொய்யாத் தமிழ்நம்பி போன்ற சில பெயர்கள் தமிழோடு தொடர்புடையதாக வருவது சிறப்பு மிக்கதாகும்.
முதலி, முதலிக்காமிண்டன்
ஊர், நாடு இவைகட்கு முதன்மையானவன் என்று பொருள்தரும் முதலி, முதலிக்காமிண்டன் என்ற பெயரைப் பலர் பெற்றிருந்தனர்.
அவிநாசி முதலியான சோழ நாராயணக் காமிண்டன் (மூல குலம்)
இளமன் முதலி (ஆந்தை குலம்)
கஞ்சப்பள்ளி வெள்ளாளன் முதலி பொத்தி (வெள்ளாளன்)
சிலம்பன் முதலி (பொருளந்தை குலம்)
பருத்திப்பள்ளி முதலி கஞ்சமலைத் தேவன் (செல்ல குலம்)
பருத்திப்பள்ளி முதலி கண்ணுவான் ஆண்டை (செல்ல குலம்)
பூமி காமிண்டன் முதலிக்காமிண்டன் (செல்ல குலம்)
மின்னாம்பள்ளி முதலிகளில் பெரியபிள்ளையாண்டை (தூர குலம்)
முதலிகள் அத்தாணிக் காமிண்டர் (செல்ல குலம்)
முதலி வீரன் (கொற்றந்தை குலம்)
பட்டி கோவனான மண்டல முதலி (விச்சர் குலம்)


வேளிர்
தற்போது உள்ள கொங்கு வேளாள கவுண்டரின் குடியின் கூட்டங்கள் மழவர் கோசர் , கொங்கர்வேளிர் என்ற நான்கு சங்க காலத்து குடியில் இருந்து தோன்றியவை .ஐராவதன் மகாதேவன்,நாகசாமி மற்றும் பல தலைச்சிறந்த தொல்லியல் ஆய்வாளர்கள் கூற்றும் இதுவே. கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் பல கூட்டங்கள் "வேளிர்" என்ற தென் இந்திய அரச பரம்பரையினர் கூட்டங்கள் ஆகும்.
விசயமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு கங்க அரசின் பிரதிநிதியாக ஈரோடு பகுதியை ஆண்ட கொங்குவேள் என்னும் சிற்றரசர், கவுண்டர் இனத்தை சேர்ந்தவர். தகடூரை ஆண்ட சத்தியபுத்திர அதியமான் வம்சத்தினர், கவுண்டர் இனத்தின் ஒரு பிரிவினராக கருதப்படுகின்றனர். சங்க கால வேளிர்கலும் இதில் அடங்குவர்.
அரசர்கள்
தமிழக மூவேந்தர்களில் சேரனும்(சேரன் கூட்டம்) ,சோழனும் (வெளியன் கூட்டம்) "வேளிர்" பரபரையினர் என்று வரலாற்று மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூற்று.[21] மற்றும் கங்கர்களும்(கண்ண கூட்டம்) , சாளுக்கியர்களும் "வேளிர்" என்ற தென் இந்திய அரச பரம்பரையினர்."கோசர்" என்ற தென் இந்திய அரச பரம்பரையினர்.

சங்க கால தமிழகத்தின் சேர நாடு தான் கொங்கு மண்டலம். சங்க கால சேரர்கள், கரூரை தலைநகராக கொண்டு மேற்கு தமிழகத்தை ஆண்டு வந்தனர்.கரூர் சேரர்களின் வழிதோன்றல்களாக கொங்கு வேளாள கங்கா அரசாங்கம் முதன் முதலாக கொங்கு மண்டலத்தில் தான் நிறுவப்பட்டது என குறிப்பிடுகிறது.அந்த அரசினை நிறுவியவர்கள் கவுண்டர்களே என்பது மங்கல வாழ்த்தில் உள்ள கங்கா குலம் என்ற குறிப்பின் மூலம் தெரிய வருகிறது.







கொங்கு வேளாளர்களே சேரமரபினர்:http://kongucheramanperumal.blogspot.in/2014/07/blog-post.html


Note:Kongu Chola and Kongu Pandya family level  details to found govt proof,eastern ganga dyanasty(born to Kongu Vellala gounder and chola princess)..Much more detailed history collected with reliable Govt proofs .. ,pallava dyanastry Generals,mens who defeated kalbrahas,Big titled kongu vellala gounders  etc.. in new blog

  1. IN 1970 International Institute of Tamil Studies; report submitted to the
    UNESCO, by A. Subbiah, Member-Secretary, Managing Committee on his
    visiting mission to fourteen countries with an UNESCO grant.
    http://www.worldcat.org/title/international-institute-of-tamil-studies-report-submitted-to-the-unesco/oclc/00393636
  2. http://books.google.co.in/books?lr&hl=fr&id=rWRkAAAAMAAJ&dq=velir+velalar&q=velalar&redir_esc=y#search_anchor
    and "also note that tamil nadu govt symbol" "The Vēļāļar of the Tamil
    country (the descendants of the Vēļir) have retained the honorific till
    this day in their names (c.f gavundan and 'gouņder' "
  3. http://books.google.co.in/books?lr&hl=fr&id=rWRkAAAAMAAJ&dq=velir+velalar&q=pandyas#search_anchor here they says kings are all velir , (i.e kongu vellala gounder )

பெண்கள் அளித்த பெருங்கொடைகள்

கொங்கு வேளாளர் குடும்பத்துப் பெண்கள் குடும்பப் பொறுப்பிலும், விவசாயத்திலும் பெரும்பங்கு வகித்ததோடு சமூகப் பணிகளையும், சமயப் பணிகளையும் மேற்கொண்டு சிறந்து விளங்கியுள்ளனர். திருக்கோயில் திருப்பணிகளோடு விளக்குகள் கொடையளித்ததிலும் ஆண்களுக்குச் சரி சமமாகப் பங்கு கொண்டுள்ளனர். சோழ பாண்டிய நாடுகளில் அரண்மனை அரச மகளிர் தவிர ஏனைய மகளிர் செய்த கொடைகள் அளவில் சிறியன. ஆனால் கொங்கு வேளாண் பெண்கள் தனித்தும் தம் கணவரோடு சேர்ந்து பற்பல கொடைகளைச் செய்துள்ளதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன.
அவிநாசிதேவன் மனைக்கிழத்தி தேவன் சொக்கி (காடைகுலம்)
அன்னிகாவன் மனைக்கிழத்தி கேசி (கொற்றந்தை குலம்)
அதிராசராச வஞ்சி வேளான் மணவாட்டி (பூச்சந்தை குலம்)
கண்ணன் பொத்தி மனைக்கிழத்தி சிறிய கண்டி (செவ்வாயர்குலம்)
கறுப்பகவுண்டன் பெண் கங்காத்தாள் (மணியகுலம்)
காங்கய தரையன் மனைக்கிழத்தி ஆண்டியான் மங்கையர்க்கரசி (சாத்துவாய் குலம்)
கேசன் மனைக்கிழத்தி அந்தியூராண்டி (சாத்தந்தை குலம்)
கோவன் மனிச்சர் மனைக்கிழத்தி உண்ணாடி (பனங்காடை குலம்)
சிலம்பன் நீலன் மனைக்கிழத்தி சிட்டன்காவி (பில்லர் குலம்)
சிறியான் சடையான் மனைக்கிழத்தி தாவந்தாவி (சாத்தந்தை குலம்)
சொக்கன் மனைக்கிழத்தி உடையான் மகள் குப்பாண்டி (கொள்ளி குலம்)
வீரகாமிண்டன் உடையாண்டான் மனைக்கிழத்தி வாமதேவன் மகள் பிள்ளையம்மை (ஆவ குலம்)
சின்னயகவுண்டன் அகமுடையாள் சிவகாமியம்மாள் (ஓதாளர் குலம்)
சொக்கன் நடுவிலான் மனைக்கிழத்தி சிறுப்பெண் (பில்லர் குலம்)
திருவானைக்காவன் விச்சாதிரன் மனைக்கிழத்தி ஆளுடையாள் (படைத்தலையர்)
நல்லிசையாளன் மகள் அஞ்சாதான் மனைக்கிழத்தி நம்பியம்மை (படைத்தலையர்)
நம்பி மனைக்கிழத்தி பிள்ளையாள்வி பாவை பிள்ளையம்மை (படைத்தலையர்)

வணிக ஈடுபாடு

கொங்கு வேளாளர் சிலர் வணிகத்திலும் ஈடுபட்டிருந்ததாகக் கல்வெட்டு மூலம் தெரிகிறது. நித்தவிநோதம் என்ற ஊரில் வாழ்ந்த வேண்டுவன் குல அதிருக்குறையான் திசையாயிரத்து ஐநூற்றுவ நானாதேசிகட்டு பாதுகாப்பு நகரம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளான் (அடைக்கலம்). செட்டிக் கவுண்டன் என்றும் செட்டியாக்கவுண்டன் என்றும் சிலர் பெயர் பெற்றுள்ளனர். கொங்கு வேளாளர்களின் காணியுரிமையுடைய குலதெய்வக் கோயில்கட்குச் சில ஊர்களில் செட்டியார்களும் காணியாளர்களாக உள்ளனர். பல ஊர்கள் செட்டிபாளையம் என்று பெயர் பெற்றுள்ளன. ‘ஆதவூர் வெள்ளாளன் குண்டெலிகளில் கருங்காள மண்டலிக சுவாமியான மன்றுளாடுவான்’, ‘நடுவிற் பத்தியூர் வெள்ளாளன் மாடைகளில் முழையன் தேவனான பொன்னம்பலச் சிலசெட்டி’ என்பவர்களின் பெயரமைப்பை நோக்கும் போது அவர்கள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள கொங்கு வேளாளர்கள் என்று தெரிகிறது. கொங்கு வேளாளர்களின் திருப்பணி பெற்ற பல்வேறு கோயில்களில் கொங்கு நாட்டு வணிகர்களும், வணிகத்தின் பொருட்டுக் கொங்கு நாடு வந்த பிற நாட்டு வணிகர்களும் பலர் பல திருப்பணிகளைச் செய்துள்ளனர். வேளாளர்களும் வணிகர்களும் இணைந்து பல அறச் செயல்கள் செய்துள்ளனர். கொங்கச்செட்டியார்கட்குக் கவுண்டர் பட்டமும் உண்டு என்பது கொங்குப் பட்டயங்களால் அறியப்பெறும் செய்தியாகும். கொங்குச் செட்டிகளில் இராமஞ் செட்டிக் கவுண்டன் என்பது அவ்வாறான பெயர்களில் ஒன்றாகும். சமய ஒருமைப்பாடு கொங்கு வேளாளர்கள் பெரும்பாலும் சைவ சமயம் சார்ந்தவர்களாக இருப்பினும் தங்கள் ஊரில் உள்ள திருமால் ஆலயங்கட்கும், கொங்கு நாட்டின் முக்கியமான பிற ஊர்களிலுள்ள திருமால் ஆலயங்கட்கும் பல கொடைகள் அளித்திருக்கின்றனர். கோயில் திருப்பணியில் பங்கேற்றிருக்கிறார்கள். வேளாளர்கள் பெரிய நாட்டுச் சபைக்கு சித்திரமேழி சபை என்று பெயர். விசயமங்கலம் கரியமாணிக்கப் பெருமாள் கோயிலும் பருத்திப்பள்ளி ஆதிகேசவப் பெருமாள் கோயிலும் சித்திரமேழி விண்ணகர் என்று பெயர் பெற்றுள்ளன. அவ்விரண்டு திருமால் ஆலயங்களும் கொங்கு வேளாளர்கட்கு மிகவும் முக்கியமான கோயிலாகும். சிவன் கோயிலுக்கும் திருமால் கோயிலுக்கும் பொதுவாக ஒரே கொடையளித்துள்ளனர்.
கொளாநல்லி பொன் குழலியம்மன் கோயில் கல்வெட்டொன்று சிவமயம் என்று தொடங்கி ராமஜெயம் என்று முடிகிறது. அக்கொடையைக் கொடுத்த கண்ணகுலப் பெரியவர் பெயர் திருமலைக்கவுண்டர் என்பது. பலருடைய பெயர்கள் வைணவப் பெயர்களாக உள்ளதைக் கல்வெட்டுக்கள் காட்டுகின்றன.
விசயமங்கலத்தில் உள்ள சமணக்கோயில் வீரசங்காதப் பெரும்பள்ளி என்றழைக்கப்படும் சந்திரப் பிரப தீர்த்தங்கரர் கோயில் ஆகும். அச்சமணக் கோயில்கட்கும் கொங்கு வேளாளர்கள் கொடை கொடுத்துள்ளனர். சமயப் பொதுநோக்கோடு கொங்கு வேளாளர்கள் திகழ்ந்துள்ளனர்.

சமூக ஒருமைப்பாடு

கொங்கு வேளாளர்கள் கொங்கு நாட்டில் வாழ்ந்த எல்லாச் சமூகத்தவர்களோடும் நேசமும், நல்லுறவும் கொண்டு வாழ்ந்துள்ளனர் என்று கல்வெட்டுக்கள் மூலம் தெரிகின்றது. பிற சமுதாயங்களோடு இணைந்து பலர் ஆலயப்பணிகளை மேற்கொண்டுள்ளனர், கொடைகள் அளித்துள்ளனர். முருங்கத்தொழுவு, நசியனூர், வெள்ளோடு போன்ற ஊர்களில் பொருளந்தை குலத்தாரும், சாத்தந்தை குலத்தாரும் கண்ணகுலத்தாரும் ஊர்க்கணக்கரோடு சேர்ந்து குல ஒற்றுமை கொங்கு வேளாளர்கள் பல குலத்தார்கள் ஒரே கோயிலுக்குக் காணியுரிமை உடையவர்களாக இருப்பர். கல்வெட்டுக்கள் மூலம் பல குலத்தார் இணைந்து ஆலயப் பணிகளை மேற்கொண்ட சிறப்பைக் கூறுகின்றன. முருங்கத்தொழு அணியரங்கப் பெருமாள் கோயிலைப் பெரிய குலத்தாரும், வெள்ளோடு சாத்தந்தை குலத்தாரும் சேர்ந்து கட்டியுள்ளனர். கத்தாங்கண்ணி ஆயி அம்மன் கோயில் திருப்பணி வேலைகளை வேண்டுவன குலத்தாரும், இருப்புபுலி செவந்தி குலத்தாரும் சேர்ந்து திருப்பணியை மேற்கொண்டனர். கொடுமணலில் சேரன், பாண்டியன், பனங்காடை குலத்தாரும், பாப்பினியில் கண்ணந்தை, தோடை குலத்தாரும், மயில்ரங்கத்தில் ஆந்தை, மாடை, வண்ணக்கன் குலத்தாரும், கீரனூரில் ஆதி, அந்துவன், காடை, விலையன், தேவேந்திரன், கீரை குலத்தவர்களும் இணைந்து கோயில் திருப்பணிகளை மேற்கொண்டதாகக் கல்வெட்டுக்கள் மூலம் அறிகின்றோம். பல கல்வெட்டுக்கள் குல ஒற்றுமையைக் காட்டுகின்றன.

திருச்செங்கோடு கன்ன குல காங்கேயர்கள் திருப்பணி: கோவில் மண்டப தூண்கள்


திருசெங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்: கொங்கு நாட்டு சிற்பக்கலை பெருமை சொல்லும் நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பம். மண்டப கூரையில் உள்ளது!

திருசெங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்: மன்மதன் சிற்பம்


 திருசெங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்: கோவிலில பெரும்பான்மை திருப்பணிகளையும், நான்கு ரத வீதிகளையும் உருவாக்கிய கன்னகுல பட்டக்காரர் - இம்முடி அத்தப்ப நல்லதம்பி காங்கேயர், மோரூர் பட்டக்காரர்.


கோவன்புத்தூர்

கோயன் என்ற இருளர் தலைவன் பெயர் ஓரிடத்தில் வருவதை வைத்துக் கொண்டு அவர் பெயரால் கோவன்புத்தூர் என ஏற்பட்டுக் கோயம்புத்தூராக மாறிற்று என்று கூறுவர். ஆனால் கொங்கு வேளாளர் பெருமக்கள் பலருக்குக் கோவன் என்ற பெயர் இருந்துள்ளதைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
கோவன் வீரணுக்கமுடையார் (இடிகரை)
சோழன் கோவன் (கொங்கூர்)
கோவன் மணிச்சர் (விசயமங்கலம்)
கோவன் இருடனான இராசநாராயணக் காமிண்டன் (கோயில்பாளையம்)
கோவன் தேவன் ஆன உதய பாலன் (பெரியகளந்தை)

சிவப்பிராமணர்

கொங்குச் சோழர், கொங்குப் பாண்டியர் காலத்தில் கொங்கு வேளாளர் பெருமக்கள் சமய நெறியுடன் ஆலயத்திருப்பணிகள் செய்து, பெரும் கொடைகள் கோயில்களுக்குக் கொடுத்து நிறைவாழ்வு வாழ்ந்ததற்குச் சிவாலயங்களின் உரிமையாளர்களாக இருந்து (காணியுடைய சிவப்பிராமணர்) கோயில்களைச் சிறப்புடன் வழிபாடு நடத்திக் காத்த சிவப்பிராமணர்களே காரணமாவார்கள்.
சோழர்கள் அவர்களைச் சோழ நாட்டிலிருந்து அழைத்து வந்தததாகக் கொங்குமண்டல சதகமும், திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலையும் கூறுகிறது. அதற்கேற்பக் கொங்கு வேளாளர் கொடைக்கல்வெட்டுக்களில் புகலிச்சக்கரவர்த்தி, சீகாழியான், தில்லை மூவாயிர நம்பி என்று சிவப்பிராமணர் பலர் பெயர்களைக் காண்கின்றோம். சைவமாமுனி, பிரமாதிராயன், சைவாலயச் சக்கரவர்த்தி, சைவபுரந்தரச் சக்கரவர்த்தி, அருமறை ஆதித்தச் சக்கரவர்த்தி, வீர நாராயணச் சைவமாமுனி என்ற பல பட்டப் பெயர்களை அவர்கள் பெற்றுச் சிறந்திருந்தனர். இப்பெயர்களால் அவர்களின் சமயத் தலைமை நன்கு விளங்குகிறது.
அவர்கள் காசிபகோத்திரம், காப்பியகோத்திரம், பாரத்வாஜகோத்திரம், ஆத்ரேய கோத்திரம், மாடல கோத்திரம், மொகல்லிய கோத்திரம், வாச்சிய கோத்திரம், கௌசிக கோத்திரம், சாலங்காயண கோத்திரம், ஆலம்பாய கோத்திரம் முதலிய கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அபிமான சோழபட்டன், ஆளவந்தசோழபட்டன், குலோத்துங்க சோழ பட்டன், வீர சோழ பட்டன் என்ற பட்டப் பெயர்களைப் பெற்றிருப்பதால் சோழரிடத்தும், பாண்டியன் சுந்தன் என்ற பெயரால் பாண்டியரிடத்தும் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்துள்ளமை புலப்படும்.
சித்திரமேழிசபை என்பது வேளாளர்சபை. நாற்பத்தெண்ணாயிரவர் என்பது வேளாளர்கட்குரிய சிறப்புப் பெயர். பல சிவப் பிராமணர்கள் சிதிரமேழிபட்டன், நாற்பத்தெண்ணாயிர நம்பி என்று பெயர் பெற்றிருப்பதால் கொங்கு வேளாளர் பெருமக்களிடம் அவர்கள் பெற்றிருந்த செல்வாக்கு நன்கு விளங்கும்.
சந்தியா தீபம், நந்தா தீபம் ஏற்றக் கொங்கு வேளாளர்களும், கொங்கு வேளாளர் குடும்பத்துப் பெண்களும் கொடுத்த பொன்னையும், காசுகளையும் சிவப்பிராமணர்களே பெற்று அதை நிறைவேற்ற ஒப்புக் கொண்டு கல்வெட்டு வெட்டிக் கொடுத்துள்ளனர். குடமும் குச்சியும் கொண்டு கோயில் உள்புகுவார் கொடைகளை ஏற்று நடத்தியுள்ளனர். அவர்களும் அவர்கள் வழியினரும் அறச்செயலைச் சந்திர சூரியர் உள்ளவரை நடத்த ஒப்புக் கொண்டுள்ளனர். பல சிவனடியார்கள் (பன்மகேசுவரர்) அறக்கொடைகளைக் காக்க வேண்டும் என்று கல்வெட்டின் இறுதியில் பொறிக்கப்பட்டிருக்கும்.

அறத்தைக் காத்தலும் அழித்தலும்

கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் சந்திரசூரியர் உள்ளவரை நின்று நிலவ வேண்டும் என்று கொடை கொடுத்தோர் விரும்பினர். பல சிவனடியார்கள் இதனைப் பாதுகாக்க வேண்டும் (பன்மாகேசுவரர் ரட்சை) என்றும், பல வைணவ அடியார்கள் பாதுகாக்க வேண்டும் என்றும், (ஸ்ரீ வைஷ்ணவர் ராட்சை) முறையே சிவன் கோயில் கல்வெட்டுக்களிலும், திருமால் கோயில் கல்வெட்டுக்களிலும் எழுதினர்.
இந்த தர்மத்திற்கு ரண்டு நினைச்சவன், அகிதம் பண்ணினவன், விகாதம் செய்தவன், அழியப் பண்ணினவனுக்கு மிகப்பெரிய பாவம் வரும் என்று கல்லில் எழுதினர்.
 ‘கங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற தோஷத்தில் போவான்’
‘காசிகங்கைக் கரையில் காராம்பசுவை மாதாபிதா குருக்களை வதை பண்ணின பாவத்திலே போவான்’
‘அசுவத்தி கோகத்தி பிரமகத்தியடைவான்’
‘பஞ்சமா பாதகம் செய்த பாவத்திலே போவான்’
‘ஏழெச்சம் அறுவான்’
என்று கல்வெட்டின் இறுதியில் பொறித்தனர். காங்கயம் அகிலாண்டபுரம் கல்வெட்டில் நரகத்திற்கு நாற்றங்கால் ஆவான்’ என்று எழுதப்பட்டுள்ளது. சிவனடியார்களைக் கத்தியால் குத்திக் கொன்ற பாவம் வரும். மகேசுவரரைப் பத்திரத்தால் கொன்றது குலையாவதாகவும் என்றும் ஒரு கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. ‘இந்த தர்மத்தைத் தொடர்ந்து நடத்தினவன் காலுத்தூள் என் தலைமேலின’ என்றும் எழுதப்பட்டுள்ளது. பாவம் புண்ணியங்களில் இருந்த நம்பிக்கை இதனால் தெரிகிறது. வரிகொடாவிடில்
கோயிலுக்கு கொடுக்க வேண்டிய வரியையோ அல்லது கோயில் நிலத்தை உழுது மேல் வாரமாக நெல்லையோ கொடுக்காதவர் வீட்டில் மண்கலங்களைத் தகர்த்து வெண்கலம் பறித்து அதனை ஈடு செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது. இது மண்கலந் தகர்த்து வெண்கலம் பறித்துக் கொள்ளல் என்று கூறப்பட்டிருக்கும். ஓலையும் செப்பேடும்
கல்வெட்டுச் செய்திகள் முதலில் ஓலையில் எழுதப் பெறுவது வழக்கம். சில கல்வெட்டுக்களின் இறுதியில் ஓலை, ஓலை கொடுத்தோம் என்ற சொற்கள் வருவதைக் காணலாம். ஓலையில் உள்ள எழுத்துக்களை பளிச் என்று தெரிகிற பொருளில் கல்லில் எழுதி அதைக் கல்வெட்டு எழுத்துக்களாகப் பொறிப்பர். சில கல்வெட்டுக்களில் ஓலையில் எழுதியது யார், அதை கல்லில் கொத்தியது யார் என்றும் எழுதப் பெற்றிருக்கும். கல்வெட்டு
கோவிராசகேசரிபன்மரான திருபுவனச் சக்கரவர்த்திகள் சீரிசுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு 25வது இராசராசபுரத்தில் வெள்ளாளன் காவன் மனைக்கிழத்தி சடையம்மையேன் இவ்வாசலில் திருநிலைகால் இரண்டும் என் தன்மம்.
எனவே கொங்கு வேளாளர் கோவன் பெயராலும் கோவைக்குப் பெயர் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இது பற்றி மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.

தாரமங்கலம் கெட்டி

கொங்குப் பகுதிகளில் வாழம் தாரமங்கலம் கெட்டி மரபினரும் முதலி பட்டம் கொண்ட கொங்கு வேளாளர் ஆவர்.இவர்கள் வண்ணக்கன் கூட்டத்தையும்,நீருண்ணியர் கூட்டத்தையும் சார்ந்தவர்.தாரமங்கலத்தை அரசு புரிந்த கெட்டி முதலிகள் என்னும் அரசர்கள் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் தம் பெயரு்க்கு முன்னால் நீருணி என்ற பெயரைச்சேர்த்து வழங்கியுள்ளனர்.இதனை கி.பி.1274-ஜ சேர்ந்த வீரராமனாதன் காலத்து கல்வெட்டு ஓன்று தாரமங்கலத்து முதலிகளில் நீருணி பெரிய இளமன் என்பவன் முதலாகன ஆறுவர் இளமீகரமுடைய நாயனார்க்கு தேவதானம் விட்டதையும்,
கி.பி.1281-ல் சேர்ந்த சடையவர்சந்தாபாண்டியன் இரண்டாம் காலத்து கல்வெட்டு ஓன்று முதலிகளில் நீருணி இளையான் நல்ல உடையப்பன் என்பவன் தனது பிதாக்கள் போரில் இலட்சுமண சதுர்வேதி மங்கலம் அமைத்ததையும் குறிப்பிடுகின்றன்.
மேலும், இளமீகரன் கோயில் காணப்படும் சுந்தர பாண்டியனின் காலத்துக் கல்வெட்டுக்களில் ஓன்று இலட்சுமண சதுர்வேதி மங்கலத்துப் பட்டர்களுக்கு உடைப் பெடுத்த காரைகளத்தினைப் பழது திருத்தி இறையிலியாகக் கொடுத்த எட்டு முதலி அரசர்களின் ஓருவராக மேற்குறிப்பிட்ட இளையான் நல்லுடையப்பனைக் குறித்துள்ளது.
இவ்வாறே, மற்றொரு கல்வெட்டு இலட்சுமணன் சதுர்வேதி மங்கலத்துப் பட்டர்களுக்கு அமரகுந்தி முதல் வெள்ளரைப்பள்ளிஈறாக ஓன்பது ஊர்களையும் செய்ய பெருமாள் ஏரி நீர் பாயும் நான்கெல்லை நிலங்களையும் இறையிலியாக கெடுத்த ஓன்பது முதலிகளில் ஓரு வராகவும் அவரைக் குறித்துள்ளது.
நீருணியர் இன்றைய நீருண்ணியக் கூட்டமே கல்வெட்டுகளில் நீருணியர் எனப்படுகின்றனர் இக்கூட்டம் பற்றிக் குறிக்கும் கல்வெட்டுகள் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து கிடைக்கப்பெற்றதாகும்.
இக்கூட்டத்தைக் குறிக்கும் ஆட்பெயர்களில் வேளாளன் என்ற சாதிப்பெயருக்குப் பதில் முதலி என்ற சாதிப்பெயர் வருகிறது.எடுத்துக் காட்டாக 'முதலிகளில் நீருணி பெரிய இளமன்' .இங்கும் வேளான் என்ற சொல் காணப்படவில்லை. வேளான் என்பதும் முதலி என்பதும் அக்காலத்தில் ஓரு பொருள் கொண்டதே என்பது இதன் மூலம் அறியலாம்.

  


A.D 08.06.1655 Kalvettu Thirumalai Nayakan Time - - Kongu Vellala Gatti Mudhali Inscription:


A.D 10.07.1565 Kalvettu Time - - Kongu Vellala Gatti Mudhali Inscription:

A.D 26.08.1547 Kalvettu - - Kongu Vellala Gatti Mudhali Inscription:

A.D 08.04.1541 Kalvettu - - Kongu Vellala Gatti Mudhali Inscription:

A.D 27.04.1540 Kalvettu - - Kongu Vellala Gatti Mudhali Inscription:


A.D 11.01.1508 Kalvettu - - Kongu Vellala Gatti Mudhali Inscription:


A.D 15.05.1280 Kalvettu - - Kongu Vellala Gatti Mudhali Inscription:










வாணர்,வாணராயர்,வாணகோவரையன்,வல்லவரையன்

வாணர்,வாணராயர்,வாணகோவரையன்,வல்லவரையன்


The Bana Chieftains had different titles in different regions at different times. Some of them include Vanar, Vanara, Vanavarayar, Vanakovarayar, Ponparappinan, Vallavaraiyan etc.
All Bana Titles we have in kalvettu
1.There was small Kootam named "Vanar" kulam/kootam among kongu vellala gounder.
2.vanvarayar: வாணராயர் என்ற பட்டப்பெயரை உடையவர்களாய் சமத்தூர் ஜமீன் (பாளையப்பட்டு) மரபினர் வாழ்கிறார்கள். அவர்கள் பவள குலத்தவர்களே, சமத்தூர் சோழீசர் கோயிலிலும் இவ்வூருக்கு 3 மயிலில் பாலாற்றங் கரையிலுள்ள சித்தாண்டீசுரர் ஆலயத்தும் வாணராயன், வாணாதிராயன், வாணவராயன் என்றுள்ள கல்வெட்டுகளிருக்கின்றன. பிரித்து அடுக்கும் பொழுது சில கற்கள் அற்றுப் போனதால் சரியாகவில்லை. ஆனால் வீரராஜேந்திரன் விக்கிரம சோழன் சாசனங்களிருக்கின்றன.
3.Vallavarayan : "Vellalaril Poonthaikalil Maniyamaraian Raja Vallavariyan " this is kongu vellala gounden kalvettu


4.Vanakovaraiyan: "Kulothunka Chola Vanakovaraiyan Yethirili Chola Velalar"
5.ponparapina vankovarayar
Bana Vidhyadhara, son of Malladeva (Married a granddaughter of the Ganga King Siva maharaja, who reigned between 1000 and 1016 AD) Former state archeology director Dr R Nagasamy, who has conducted extensive research on the ancient and modern history of Tamil Nadu, has written that a family known as Mahabali Vanavarayar and Maavali Vanavarayar had ruled the north western parts of Tamil Nadu in the sixth and seventh centuries. The family was involved in public affairs since the Sangam era and their power and position increased in the 6th century AD, notes Nagasamy in his essay, 'Oru Tholperunkudiyin Varalaru,' which has been included in the volume, 'Kalaveliyil Oru Jeevanathi: Vanavarayar Varalaru,' edited and compiled by Pundit K Arunachala Gounder. What u think of NAgaswamy lines ..http://articles.timesofindia.indiatimes.com/2012-08-29/coimbatore/33474674_1_onam-kerala-tamil-nadu
வாணராயன் தொங்கவைத் துள்ள பனையேட்டில் வாயிற் சொலாதெழூதி
யங்குவைத் தாலதிற் கண்டதை யன்பி னரிதினல்கி
யிங்குமற் றும்வரு வீர்புல வீரென் றிசைபவள
வங்கிசத் தார்வாண ராயனும் வாழ்கொங்கு மண்டலமே.
(க-ரை) வீட்டின் முகப்பில் பனையேடும் எழுத்தாணியும்
தொங்கவிட்டு, வேண்டிவற்றை வாயாற் சொல்லாமல் எழுதிவிட அதிற்
குறித்தவற்றை வந்த புலவருக்கு உதவி, மறுபடியும் வர வேண்டுமென்று
உபசரிக்கும் பவள குலத்தவனான வாணராயனுங் கொங்கு மண்டலம்
என்பதாம்.
வரலாறு :- கொங்கு வேளாளரில் பவள கூட்டத்தில் வாணராயன்
என்னுஞ் சிறப்புப் பெயர் பெற்று மிகுந்த தமிழ் அபிமானங் கொண்டவனாய்
படித்தவர்களை நன்கு போற்றி அவர்கள் நல்லும் தேசங்களைப் பாராட்டி
இல்லையென்னாது கொடுத்து உபசரிக்குப கடப்பாடு உடையவனாக
ஒருவனிருந்தான்.
மன்னவராகப் பிறந்தார் கல்வி, யறிவு கைவரப் பெற்றவரேல்
விண்ணவரே போல்வர் என்பது, புலவர் என்னும் பெயர்
இருபாலர்க்கும் ஒப்ப வழங்குதலானே தெளிவாம். கற்றாருள்ளும்
நல்லிசைப் புலமை வாய்ந்த சான்றோர் பெருமை அளப்பரிய தொன்றாகும்.
உலகம் பொல்லார் உறவை விடுத்து நல்லோரிணக்கங்கொண்டு
யாவரிடத்தும் அன்பு கொண்டு நடக்குமாறு செய்வதே தொழிலாக
உடையவர்கள் தமிழாய்ந்த புலவர்கள். அவர்கள் ஒருவனிடத்துள்ள
குற்றங்களை எடுத்துப் பிற இடத்தும், எதிரிலும் அஞ்சாது இடித்துரைப்பர்.
இதனால் அவர்களைச் சிலர் வெறுப்பர்; அவர் அறியார். அவர்களுக்கு
வேண்டுவன உதவிச் சிலர் அவர் கூறும் இசை மொழியைக் கேட்டு
மகிழ்வர். இதனால் உலகம் நல்வழிப்பட்டு ஒழுகும். அப்புலவர்கள்
உலகினர்களுக்கு கீதோபதேசஞ் செய்தலே பொழுதுபோக்காக இருப்பதால்,
தங்கள் குடும்ப நிர்வாகம் கஷ்டமாக நடக்க வேண்டி இருக்கும் ஆதலின்
தங்கள் முக ஒளி இழந்து எனக்கு இது தா என்று கேட்க நாணுவார்கள்
என்று நினைந்து, தன் வீட்டு முகப்பில் ஒரு எழுத்தாணியும் ஓலையும்
தொங்க விட்டிருப்பர். சென்ற புலவர்கள் தாங்கள் விரும்பியவற்றை அதில்
எழுதிவிடுவார்கள். ஏவலாளர்கள் உடனே அதை எடுத்துப் போய்க்
கொடுப்பர். அவற்றை முன்னே உதவிப் பின்பு அப்புலவர்களைப் பார்ப்பது
அவ்வுபகாரியின் கொள்கை. நேரிற் கண்டு சந்தோஷ மொழிகள் பேசி
அடிக்கடி வந்து கொண்டிருக்க வேண்டுமென்று பல முறை இரந்து கூறி
வழியனுப்புவர் என்பர்.
வாணராயர் என்ற பட்டப்பெயரை உடையவர்களாய் சமத்தூர் ஜமீன்
(பாளையப்பட்டு) மரபினர் வாழ்கிறார்கள். அவர்கள் பவள குலத்தவர்களே,
சமத்தூர் சோழீசர் கோயிலிலும் இவ்வூருக்கு 3 மயிலில் பாலாற்றங்
கரையிலுள்ள சித்தாண்டீசுரர் ஆலயத்தும் வாணராயன், வாணாதிராயன்,
வாணவராயன் என்றுள்ள கல்வெட்டுகளிருக்கின்றன. பிரித்து அடுக்கும்
பொழுது சில கற்கள் அற்றுப் போனதால் சரியாகவில்லை. ஆனால்
வீரராஜேந்திரன் விக்கிரம சோழன் சாசனங்களிருக்கின்றன.
சேரமான் பெருமான் என்னும் அரசனால் சகம் 713 என்று கண்டு
இவர்களிடத்துள்ள ஒரு தாம்பிர சாசனத்தாலும் இம்மரபினர் ஒரு சாமய்ய
தியாகராஜ பண்டிதருக்குக் கொடுத்த நிலதான சாசனத்தாலும் இவர்கள்
பூர்வ சரித்திரம் தெரிகிறது. ஆனகுந்தி சமஸ்தானத்தரசர்கள் இவர்களின்
முன்னோரில் ஒருவருக்கு வளர் கடாயைக்காதறுத்த வணங்காமுடி
வாணராயன் என்ற பட்டப்பெயர் கொடுத்திருக்கிறார்கள். கோயமுத்தூர்
ஜில்லா பொள்ளாச்சித் http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=133n வாணராயர் என்ற பட்டப்பெயரை உடையவர்களாய் சமத்தூர் ஜமீன்
(பாளையப்பட்டு) மரபினர் வாழ்கிறார்கள். அவர்கள் பவள குலத்தவர்களே,
சமத்தூர் சோழீசர் கோயிலிலும் இவ்வூருக்கு 3 மயிலில் பாலாற்றங்
கரையிலுள்ள சித்தாண்டீசுரர் ஆலயத்தும் வாணராயன், வாணாதிராயன்,
வாணவராயன் என்றுள்ள கல்வெட்டுகளிருக்கின்றன. பிரித்து அடுக்கும்
பொழுது சில கற்கள் அற்றுப் போனதால் சரியாகவில்லை. ஆனால்
வீரராஜேந்திரன் விக்கிரம சோழன் சாசனங்களிருக்கின்றன.
சேரமான் பெருமான் என்னும் அரசனால் சகம் 713 என்று கண்டு
இவர்களிடத்துள்ள ஒரு தாம்பிர சாசனத்தாலும் இம்மரபினர் ஒரு சாமய்ய
தியாகராஜ பண்டிதருக்குக் கொடுத்த நிலதான சாசனத்தாலும் இவர்கள்
பூர்வ சரித்திரம் தெரிகிறது. ஆனகுந்தி சமஸ்தானத்தரசர்கள் இவர்களின்
முன்னோரில் ஒருவருக்கு வளர் கடாயைக்காதறுத்த வணங்காமுடி
வாணராயன் என்ற பட்டப்பெயர் கொடுத்திருக்கிறார்கள். கோயமுத்தூர்
ஜில்லா பொள்ளாச்சித்.தாலுகாவைச் சார்ந்தது இந்த ஜமீன் (பாளையப்பட்டு) இப்போதுள்ள
ஜமீன்தாரர் பெயர் வேங்கட சுப்பு ராமசாமி வணங்காமுடி வாணராயர்
என்பதாம். வளர்கடாயைக் காதறுத்த பஹதூர் தொண்டைமான் எனப்
பெருமையுற்றார் ஒருவர்.(poosan kulam) இம் மண்டலத்துளர் என்பதை இந்நூல் 71-ம்
செய்யுளுரையில் காணலாம்.
மேற்
வாயிலிற் றொங்கு மேட்டில் வரைந்ததைப் புலவர்க் கென்றும்
ஓய்விலா துதவு கீர்த்தி யோங்க வாழ் பவளன் வாண
ராயனெந் நாளும் போற்ற நலமருள் சித்தாண்டீசர்
வாயிலைக் காக்குங் கட்டியக்காரன் வருகின்றானே.
(சித்தாண்டீசர் - மோகினி விலாசம்)



கல்வெட்டின் தொண்மை

கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மை-யானவை

கொங்கு நிலம் பற்றியும் அப்பகுதி மக்கள் பற்றியும் சங்க இலக்கியக் காலம்தொட்டு கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் குறிப்புகள் உள்ளன. அகழ்வாய்வுத் தரவுகளும் இப்பகுதியின் வாழ்வியல் தொன்மைக்குச் சான்றளிக்கின்றன. இந்நிலையில் நமது பெயரியல் ஒப்பாய்வு வியக்கத்-தக்க பல சான்றுகளை வெளிக்கொணர்கிறது. கொங்கு என்ற இடப்பெயர் மட்டுமன்றி தமிழ்நாட்டுக் கொங்கு மண்டலத்தின் வரலாற்று மரபு சார்ந்த நிலப் பிரிவுகளான ஆறை, கோவங்கம், கவைய, கவச, செம்ப, தணக்க, தலைய, அரைய, பழன, வாரக்க, முளசை, காங்கேய, தூர, அண்ட, மன்னி, மண, உருக்கா, வாழவந்தி, படி போன்ற பெயர்களை அப்படியே நினைவுறுத்தும் இடப்பெயர்களைச் சிந்து வெளியிலும் அதற்கு அப்பாலும் உள்ள வடமேற்குப் புலங்களிலும் காண முடிகிறது.
கொங்கு வேளாண் குடிகளின் சமூகவியல் வரலாற்றில் காணி ஊர்களுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு.களங்காணி, மானூர், பாப்பிணி, முளசி, தோளூர், பழனி, தூசி, ஆளியார், கொற்றை, கோக்-கலி, கோட்டூர், கூகலூர், நவனி, திடுமல், மொஞ்-சனூர், பட்டாலி, கத்தேரி மற்றும் இன்ன பிற காணி--யூர்ப் பெயர்களை முழுக்க ஒத்திருக்கும் பெயர்கள் அப்பகுதிகளில் பயன்பாட்டில் உள்ளன.
கொங்கு வேளாளர்களின் அடிப்படையான குழு அடையாளம் அவர்களது கூட்டம் ஆகும். சிந்து வெளிப்பகுதியிலும் அதற்கு அப்பாலும், கொங்கு வேளாண் குடியினரின் கூட்டப் பெயர்களை (Clan names) நினைவுறுத்தும் இடப்பெயர்கள் வழங்குகின்றன. ஆதன், அந்துவன், ஆதி, அடகர், அழகன், ஆவன், ஆடர், ஓதாளன், கண்ணர், செங்கண்ணி, சேரன், செம்பூத்தான் ,பாண்டியர், பில்லன், ஆடை, ஆவலன், மணியன், மாடை, ஆந்தை, மூலன், மூத்தன், மேதி, வாணி, தூரன், கல்வி, காமன், காடை, கொடியன், கொற்றன், கோவன், சேகன், நாகன், நீலன், பதரி, உண்ணகர், ஓசை, கம்பன், காவலன், காரை, கீரை, கொள்ளி, சோமன், தட்டை, நந்தர், நாரை, நேரியன், பாசை, வேந்தர், வெளியன், ஈஞ்சர், ஒழுக்கர், குழாயர், கூறை, செம்பர், சேடர், பனையர், அவுரியன், பூச்சந்தை, பூசர், பெரியன், பொன்னன், மயிலர், மழவன், வண்ணக்கர், தனஞ்செய், தோடை, பவளர், அவுரியன், ஊரியன், காவூரி, குங்கிலி, கொம்மையர், கோரக்கர், சாத்தந்தை, செழியன், தோயன், நெய்தலி, பணகன், வல்லி, தழிஞ்சி, பயிரன், பதுமன், கொண்டரங்கி, செல்லன், நீருணி போன்ற கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்களை நினைவுறுத்தும் இடப் பெயர்கள் இதற்குச் சான்றாகும்.
இந்தக் கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மை-யானவை. சங்க கால அரசர் பெயர், குறுநிலத்-தலை-வர் பெயர், புலவர்களின் பெயர்கள், பழங்-காலக் கல்வெட்டுகள், மட்பாண்ட ஓடுகளில் குறிக்-கப்பட்டுள்ள தனி மனிதர்களின் பெயர்களில் கொங்குக் கூட்டப் பெயர்களில் சிலவற்றின் பயன்-பாட்டைக் காண முடிகிறது. இதைக் கொண்டு, இப்பெயர்களின் பயணத்தின் தொன்மையை அளவிட முடியும். [6][7]இது ஒரு பதச் சான்றாய்வே (Sample Study) ஆகும்.[8][6]

காலம்(kongu vellala gounders kalvettu)

சங்க காலம்(3 கி.மு-4 கி.பி):சேர,சோழ,பாண்டியர் எண்ணிக்கை--20 எழுத்து முறை:தமிழ் பிராமிக் எழத்து.
சங்கம் மறுவிய காலம் அடுத்து காலம்--(5 கி.பி- 9 கி.பி):கொங்கர்(கங்கர்)/சேரர்,பல்லவர் எண்ணிக்கை-- 70
எழுத்து முறை:வட்டெழுத்து/கிரந்த ௭ழுத்து அடுத்து காலம்--(10 கி.பி- 11 கி.பி): சோழர்,பாண்டியர் எண்ணிக்கை-- 100
எழுத்து முறை:வட்டெழுத்து/கிரந்த ௭ழுத்து அடுத்து காலம்--(11 கி.பி- 14 கி.பி):கொங்கு சோழர்,சோழர்,கொங்கு பாண்டியர் எண்ணிக்கை-- 270
எழுத்து முறை:வட்டெழுத்து/கிரந்த ௭ழுத்து அடுத்து காலம்--(15 கி.பி- 18 கி.பி): எண்ணிக்கை-- 150
எழுத்து முறை:வட்டெழுத்து/கிரந்த ௭ழுத்து அடுத்து காலம்--(18 கி.பி- 1947 கி.பி): எண்ணிக்கை-- 70 காணுமே

சங்க காலம்(3 கி.மு-4 கி.பி)

பிராமிக் கல்வெட்டுக்களிலுமம்,ஆறுநாட்டார் மலைக்கல்வெட்டுக்கள்,அரச்சலூர் மலைக்கல்வெட்டு,கொடுமணல் போன்று அகழ்வாராய்ச்சி செய்த இடங்களிலும் கிடைத்த மண்பானை ஒடுகளில் அந்துவன்,ஆந்தை,கண்ணன்,கொற்றன்,கொற்றந்தை,ஓதாளன்,சாத்தந்தை,மணியன், வண்ணக்கன்,கீரன்,தோடன் குலத்து கொங்கு வேளாளர்கள் குறிக்கபெறுகின்றனர்.

  கொங்குநாடு தொன்மை தொடங்கி உழவிலும், பசுக் காத்தலிலும் 
பேர்பெற்ற நாடு. ஆசிரியர் நச்சினார்க்கினியர் தமது தொல்காப்பிய 
வுரையில் மென்றொடர்க் குற்றியலுகரம் அத்துச்சாரியை பெறுவதற்குக் 
கொங்கத்துழவு" என்று உதாரணங் கூறியிருப்பதும் பதிற்றுப்பத்தில் 
"ஆகெழு கொங்கர்நாடு (22)" என வருவதும் அகநானூற்றில் (79)
".... .... .... .... .... .... .... .... .... கொங்கர்
 
படுமணியரயம் நீர்க்குநிமிர்ந்து செல்லும்
 
சேதாவெடுத்த செந்நிலக் குருஊத்துகள்
 
அகலிரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
 
நனந்தலை அழுவம்"
என வருவதும் கொங்கு நாட்டில் உள்ள உழவின் மிகுதியையும் பசுவின்
மிகுதியையும் உணர்த்துவனவாம்.

சில கல்வேட்டுக்கள் கீழே

கொற்றந்தை இளவன்(குறுநிலத்-தலை-வர்)


கொற்றந்தை இளவன்(கொற்றந்தை கூட்டம்) இவற்றில் கொற்றந்தை என்ற குடி இரண்டாயிரம் ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது என அறிகிறோம். புகளூர் சேரமன்னன் கல்வெட்டின் அருகில் அதே கல்வெட்டில் கொற்றந்தை இளவன் என்பவன் குறிக்கப்படுகிறான்.[4][9]

இரும்பிடர்த் தலையார்

சோழன் கரிகால்னின் மாமா இரும்பிடர்த் தலையார்,இரும்பிடர்த் தலையார் என்பவருக்கும் அவர் பரம்பரையில் தோன்றிய யாவருக்கும் வேணாடர் என்ற பட்டப் பெயர் வந்து பொருந்துவதாயிற்று.[10][11][12]

கொக்கூர்(2 கி.பி)


இந்த கல்வெட்டு சேலம் மாவட்டத்தில் இருந்து இருபத்தி ஐந்து
தொலை அளவில் உள்ள இயற்கை ஏரியின் அருகில் உள்ள குன்றில் வெட்டபபட்டுள்ளது. (பரம்பன் கொக்கூர் கிழன் மகன் வியக்கன் கோபன் கனதேவன் தொடா குணை )
பரம்பன் கொங்கூர் கிழான் மகன் வியக்கன் கோபன் கனதேவன் தொடா குணை .
கொங்கு சோழன் வீரராஜன்திரன் காலத்தில் பில்லான்தேவன் என்ற 
வெள்ளாள சாத்தந்தை குலத்தை சேர்ந்த குறுநில மன்னன் 
கொங்கூர் பகுதியை ஆட்சி செய்ததை கல்வெட்டு (என் 66/1960) குறிக்கின்றது .[5]

சங்கம் மறுவிய காலம்

சில கல்வேட்டுக்கள் கீழே

Pannai kulam/kootam/gothram -- 6 th Century A.D=

1.அதியரைசர்க்கு-போந்தை ஊராளி பண்ணன் நாட்டார்(பண்ணை குலம்) 2.கோவிசைய சிங்கவிண்ண பருமார்க்கு முப்பத்து மூன்றாவது கங்கதி அரைசர் மக்கள் மேல் விண்ணனார் சேவகன் தொப்பு வரும்பாடி ஆள்கின்ற பசீரப்பண்ணன் குறட்டாதன் தொறுக் கொண்ட ஞான்று எறிந்து கந்தபரு பொன்னாதியார்கல்

7th century A.D- காமுண்டன்

கல்வெட்டுகளில் வெள்ளாளரைப்பற்றிக் கூறும்போது முதலில் அவன் வெள்ளாளன் எனக்கூறி பின்னர் அவனது உட்குடிப்பெயர் கூறி, பின் அவனது இயற் பெயரைக்கூறி, அவனது பட்டப் பெயரைக் கூறி அவன் கொடுத்த கொடையைக் கூறுவது மரபு. இதற்கு எடுத்துக்காட்டாக கீழ்வரும் கல்வெட்டைக் கூறலாம்.
"கவையன்புத்தூரில் இருக்கும் வெள்ளாளன் மலையரில் கேசன் கோன் ஆன தமிழ வேள்" என்று வருகிறது. பல வெள்ளாளர்கள் புது ஊர்களைத் தோற்றி வித்து இருக்கிறார்கள். இவர்களில் பலர் கோவன் என்ற பெயர் கொண்டவராக இருந்தனர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட புத்தூர் தான் கோவன் புத்தூர் என்பது. இப்பொழுது கோயன்புத்தூர் என அழைக்கப்படும் மாநகரம் ஆகும்
இக்கூட்டத்தைக் குறிக்கும் ஆட்பெயர்களில் வேளாளன் என்ற சாதிப்பெயருக்குப் பதில் முதலி என்ற சாதிப்பெயர் வருகிறது.எடுத்துக் காட்டாக 'முதலிகளில் நீருணி பெரிய இளமன்' .இங்கும் வேளான் என்ற சொல் காணப்படவில்லை. வேளான் என்பதும் முதலி என்பதும் அக்காலத்தில் ஓரு பொருள் கொண்டதே என்பது இதன் மூலம் அறியலாம்.
முதலிகளில் சுவடன் செய்யான் குன்ற காமுண்டன் ; முதலிகளில் சாகடன் இளமன் பெருமாள் காமுண்டன்;
7th Century: நடுகற்கள் செங்கம் சேவகன் ' சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் செந்தாரப்பட்டியில் கிடைதத்த வட்டெழுத்துப் பொறித்த நடுகல்லில்தான் 'கங்கரைசரு சேவகன் சாகாடன் நக்கன்'
என்ற காடைகுல வீரனின் பெயர் கல்வெட்டில் காணப்படுகிறது.

கொங்கத்து எழுமாத்தூர் வாழும் சாகாடைச் சிற்றரசன்


வடஆற்காடு மாவட்டம் செங்கம் வட்டத்தில் கிடைத்துள்ள நரசிம்மன் கி.பி 8ஆம் நூற்றாண்டில் காலத்து நடுகற்கள் வண்ணக்கன் சாத்தன் என்பவனும் வண்ணக்கன் காடையாளர் என்பவனும் ஆநிரைகளை மீட்டு வீரமரணம் அடைந்ததைக் குறிப்பிடுகின்றன்.(vannakan )
8th century:வட ஆர்க்காடு மாவட்டம்,செங்கம் வட்டம் ,சின்னய்யம் பேட்டையில் கிடைக்கும் இரு நடுகற்களில் கொங்கத்து எழுமாத்தூர் வாழும் சாகாடச் சிற்றன் என்ற காடை குலம்' என்ற காடை குலம்
கோவிசைய கம்பபர்மற்கு / யாண்டு ஆறாவது கொங்க / த் தெழுமாத்தூர் இருந்து / வாழுஞ் சாகாடச் சிற்றன் / மீகொன்றை நாட்டு / ப் புளியூர் எரு / மை கொண்ர ஞா / ன்று பூசல்லோடி / மேல் வேணாட்டு மணி / க்கலவடவூரில் முட்டி எ / ருமைத் தொறு மீட்டு மட்டா / ன் சாகாடச் சிற்றன் சாகாடைச் சிற்றரசன் , இவன் செங்கத்தின் மீது படையெடுதமையைச் செங்கம் நடுகற்கல்வெட்டு கூறுகிறது.
.. STILL எழுமாத்தூர் sourding ruled எழுமாத்தூர் பனங்காடை கோத்திரத்து அவலூர் பட்ட நல்லகுமாருடையார்.(kadai kulam)
காடைக் கூட்டம் சாகாடைச் சிற்றரசனின் பேரால் எற்பட்டது . இவன் செங்கத்தின் மீது படையெடுதமையைச் செங்கம் நடுகற்கல்வெட்டு கூறுகிறது. நண்ணாவுடையார் உலகுடையார்
தென்னார் மதுரைச் சீராம ராமர் செழுங்கிரியில்
பொன்மாரி பெய்திடும் பூந்துறை நாடதும் பூவணையும்
ஒன்மான மாகிய நண்ணா வுடைய குலகுடையார்
மன்னார் கனக முடிசூட்டி வாழ்கொங்கு மண்டலமே.
a. முதலூர் “அவல்” பூந்துறை (பாரசீகம்: அவல் = முதல்) பூந்துறை ராசாம்பாளையம் (தற்பொழுது காரூத்துப்பாளையம்)
b. வெள்ளோடு – உலகபுரம்
c. நசியனூர் - சாமிக்கவுண்டன்பாளையம்
d. எழுமாத்தூர் – அவலூர் - “அவல்” ஊர் (பாரசீகம்: அவல் = முதல்)
இந்நான்கு பெரியவீட்டாருக்கும் மேல்கரை பூந்துறை நாட்டின் தலைமை ஸ்தலமான சென்னிமலையில் மடங்களும் உரிமைகளும் உள்ளன.
a. பூந்துறை – நன்னாவுடையார் (நன்னாடு உடையார்) :
நண்ணாவுடையார் உலகுடையார்
தென்னார் மதுரைச் சீராம ராமர் செழுங்கிரியில்
பொன்மாரி பெய்திடும் பூந்துறை நாடதும் பூவணையும்
ஒன்மான மாகிய நண்ணா வுடைய குலகுடையார்
மன்னார் கனக முடிசூட்டி வாழ்கொங்கு மண்டலமே.
பூந்துறை இரண்டு பிரிவுகளாக உள்ளது. அவல் பூந்துறை – முதல் பூந்துறை, துய்யம் பூந்துறை – இரண்டாம் பூந்துறை. இவ்வூரே கொங்கதேசத்தின் முதல்ஊராக வழங்கி வருகிறது. இவ்வூர் சாகாடை கோத்திரத்தார் (காடை கூட்டம்) ஆதிகாணியாகும். அவல் பூந்துறைக்குள்ளிருக்கும் காரூத்துப்பாளையமேபூந்துறை பட்டக்காரரது ஊராகும். இவர் இரு கரைகளிலிருக்கும் பூந்துறை நாட்டிற்கும் பெரியபட்டக்காரர். மேலும் கொங்கதேச தலைமை ஸ்தலமான கருவூர்பசுபதீசருக்கு கலசம் வைப்பதும், அரசரான சேரமானுக்குப் பட்டம் சூட்டி வைப்பதும், இருபத்திநான்கு நாட்டாருக்கும் பட்டம் சூட்டிவைப்பதும் இவரே.ஆதியானதும், பெரியதும், வளமையானதுமான பூந்துறை நன்னாட்டை உடையவராதலால் நன்னாடு உடையார் என்ற பட்டம் ஆதியில் சேரனால்அளிக்கப்பட்டது. கொங்கு மண்டல சதகப் பாடல்களிலும், ஆவணங்களிலும், பட்டயங்களிலும், கல்வெட்டுகளிலும் இவரது பெயரைப் பரவலாகக் காணலாம்.தீரான் சின்னமலைக்குப் பக்கபலமாகவும், அபயம் அளித்தவருமான வம்சத்தவர். அப்போராட்டத்தால் வெள்ளையர்கள் அனைத்து அதிகாரத்தையும்பிடுங்கிக்கொண்டனர். அப்போராட்டத்தில் உயிரைத்தவிர அனைத்தையும் இழந்தவர்கள்.

9th century maniyan kulam/Kootam/gothram

"ஸ்ரீசகரையாண்டு எணணூற்று நாற்பத் தேழாவது
அன்னையன் வீர நுளம்பனுக்கு ஆண்டு இரண்டாவது
வல்லவரையர் நாட்டில் தொறுக்கொள்ள
பாவான்னையூர் காமிண்டன் மணியன் மணியனார்
தொறு மீட்டுப்பட்டார்"'
என்பது அக்கல்வெட்டாகும்.
சேலத்தில் உள்ள தீப்பாஞ்ச அம்மன் கோயிலில் இரண்டு பெண்களின் உருவங்கள் ஓரே பலகைக் கல்லில் செதுக்கப்பதட்டுள்ளன.இவர்களின் கணவன்மார்கள் போரில் கொல்லப்பட்ட செய்தி அறிந்தவுடன் தீயில் பாய்ந்து இறந்ததால் அவர்களின் புகழை நிலை நிறுத்தும் வண்ணம் மக்கள் சிலை வைத்துக் கோயில் கட்டி வணங்கி வருகின்றனர்.

கொங்குவேள்(7th Century A.D)

இந்நூலாசிரியர் கொங்கு வேளிர் என்னும் நல்லிசைப்புலவர் ஆவார். இப்பெயரானே இப்பெரியார் கொங்குநாட்டிலே சிறந்து விளங்கிய வேளிர் குடியிலே பிறந்தவர் என்பது விளங்கும் நீதப் புகழ் உதயேந்திரன் காதை நிகழ்த்துதற்குக் கோதற்ற மங்கையின் மூன்று பிறப்புற்ற கொள்கையன்றி மேதக்க சொற்சங் கத்தார் வெள்கவே கொங்குவேள் அடிமை மாதைக் கொடுத்தறம் சொன்னது வுங்கொங்கு மண்டலமே
எனவரும் கொங்குமண்டல சதகமும் (99) இதற்குச் சான்றாகும். [இதன்கண் மங்கை என்றது கொங்கு மண்டலத்தில் இப்பொழுது 'விசயமங்கலம்' என்று கூறப்படும் மூதூரினை என்பர் ஆராய்ச்சியாளர்.]
வேளிர்குடி என்பது பண்டைநாள் தமிழகத்திற் சிறந்து திகழ்ந்த பெருங்குடிகளில் ஒன்று. வேளிர் என்பதன் பொருள் வேளாண் மரபினர் என்பதாம். இம்மரபினர் முடியரசர்க்கு மகட்கொடைக்குரியராகவும் குறுநில மன்னராகவும் இருந்து கோலோச்சி வந்தனர் என்றும் அறிகின்றோம். அழுந்தூர் வேள், நாங்கூர்வேள், இருங்கோவேள் என்பாரும் இவ் வேளிர் குடித்தோன்றல்களே. இவ்வேளிர்குடி நாட்டினைப் பற்றிப் பதினெண் வகைப்படும் என்பர். அப்பதினெண் வகையுள் ஒன்றாகிய கொங்குவேளிர் குடியிற் பிறந்தமையால் இவர் குடிப் பெயராலேயே வழங்கப்பட்டனர். இவர்தம் இயற்பெயர் தெரிந்திலது.
கொங்குவேளிர் புலவர் ஆதலோடு புரவலரும் ஆவார். இவர் தம் நாட்டில் ஒரு செந்தமிழ்ச் சங்கம் நிறுவித் தமிழ்ப் புலவரைக் கூட்டி அவரையும் தமிழ்மொழியையும் பேணிவந்த பெரியோர் என்று தெரிகின்றது. இவர் இங்ஙனம் தமிழாராய்ந்தே இப் பெருநூலை இயற்றினர் என்பதனை,

உதயேந்திர சிம்மன்(708 A.D - 790 A.D)

பூசன் தற்பொழுதும் பூசன் கூட்டம் கொங்கு வேளாளர் கூட்டங்களில் ஓன்றாக விளங்கி வருகிறது. சோழமாதேவி கல்வெட்டில் இது 'பூசகர்' என்று குறிக்கப்பட்டுள்ளது பூசன் கூட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் முதன்மையான சான்று வட ஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் கிடைத்த உதயேந்திரம் செப்பேடுகள்வ ஆகும்.உதயேந்திரன் செப்பேடுகளில் குறிக்ப்பெறும் உதயேந்திர சிம்மன் 'பூசன்' கூட்டத்தைச் சார்ந்தவராக இச் செப்பேடு கூறுகிறது. பூசன் மாற்றுத்துறை என்பது போர் முறைகளுள் ஓன்று.
பல்லவ அரசன் நந்தி வர்மன் பல்லவ மல்லனுடைய ஆட்சியின் இருபத்தோராம் ஆண்டிலே அவனுடைய படைத் தலைவனும் பூசன் குலத்தில் பிறந்தவனும் வேகவதியின் கரையிலுள்ள வில்வல நகரத்து அதிபதியுமான உதயேந்திர சிம்மன் .அவ்விதம் உதயேந்திர சிம்மன் விண்ணப்பம் செய்ததைக் குறிப்பிடும் இடத்தில் அவன் தன் அரசனுக்கு ஆற்றிய பணிகளும் விரிவாகக் கூறப்படுகின்றன.எதிரிகளிடமிருந்து நாட்டை மீட்டுப் பல்லவ சிங்காதனத்தில் நந்திவர்மனை நிலைநிறத்தியவன் அவனே.அவனுடைய வேண்டு கோளின்படி பச்சிமாச்சரிய நதி விஷயத்தில் குமாரமங்கல வெள்ளாட்டூர் என்ற கிராமத்தை , கொற்ற கிராமம் என்ற ஊரில் இரண்டு ஜலயந்திரங்களோடு,உதயசந்திரமங்கலம் என்று புதுப் பெயரிட்டு நூற்றெட்டுப் பிராம்மணர்களுக்கு அளித்த செய்தி காணப்படுகிறது.

அளிக்கப்பெற்ற கிராமத்தின் நான்கு எல்லைகள் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.அதர்ம காரியங்களைச் செய்யும் வேற்றேரை நீக்கி,அந்த ஊர் அளிக்கப்பட்டது என்ற விவரமும் கூறப்பட்டுள்ளது.தானம் பெற்றவர்களின் விவரமும் விரிவாகக் காணப்படுகிறது.முடிவிலே ,சந்திரன் நட்சத்திரம் உள்ளளவும்,வானத்திலே சூரியன் சுற்றும் வரையிலும் ,மலை உள்ளளவும் பூசன் வம்சம் நிலைத்திருக்க வேண்டும்மென்று வாழ்த்துக் கூறப்பட்டிருக்கிறது.மேதாவி குலத்தில் பிறந்த சந்திரதேவன் மகன் பரமேச்வரன் என்னும் கவி அந்தப் பிரசஸ்தியை எழுதியதாகக் கூறும் செய்தியோடு சாசனம் முடிவடைகிறது.[14][15]

உதயேந்திர சிம்மன் சிற்பம்

டாக்டர் மீனக்ஷி "காஞ்சி வைகுண்டப்பெருமாள் கோயிலில் காணும் வரலாற்றுச் சிற்பங்கள்" என்ற தொல்லியல் அய்வு நூல்லில்,உதயேந்திர சிம்மன் சிற்பம் விவரிக்கபட்டுள்ளது. 14-ஆம் கட்டத்தின் ஒரு பகுதியும் 15-ஆம் கட்டம் முழுவதும் இந்த நிகழ்ச்சிகளை(ஆதாவது பல்லவ மல்லனை உதயேந்திர சிம்மன் நந்திபுரம் முற்றுகையிலிருந்து மீட்ட நிகழ்ச்சியை)ச் சித்திரிப்பவைகளாக உள்ளன.
"இவர்களுக்குப் பின்புறமாக மேலும் மூவர் நின்று கொண்டிருக்கிறார்கள்.அடிப் பகுதியில் முன் கட்டத்தைச் சேர்ந்த போர் வீரர்களில் ஜவர் அணிவகுத்துச் செல்வதே போல் உள்ளனர்.அழகனகவும் இளைஞனகவும் குதிரை மீது அமர்ந்து செல்லும் அவ்வீரன் உதயேந்திர சிம்மன் போலும்.போட்டியிடும் சித்திர மாயனுடைய சேனையை எதிர்த்துச் செல்வது போலக் காண்கிறன் அவன்


கல்வெட்டுகளில் காணப்பெறும் மேலும் சில வெள்ளாளப் பெயர்கள்.

4th AD-5AD களப்பிரர்களை தோற்கடித்து

பூசன் கூட்டம் என்பது போர் இலக்கணத்தை தழுவிஏற்பட்ட பெயராகும். "பூசன் மாறறு" என்பதற்கு நிரைகவர்ந்த வெட்சியார்(வெட்சிப் பூ குடிக்கொண்டு ஆதிரைகளைக்கவர்வோர்)அதனை மீட்க வந்த கரந்தையரை(கரந்தைப் பூ சூடியோர்) போரில் அழித்தமை கூறும் புறத்துறையாகும் என்று போர் இலக்கணம் கூறுகிறது. கால்நடைகளைக்கவர்தல் பற்றியும் ,அதனை மீட்பது பற்றியும் சங்க நூல்களில் செய்திகள் காணக் கிடைக்கிடைறன.எனவே,இத்தகைய போர் முறையில் பயிற்சி மிக்கவர்கள் என்ற அடிப்படையில் பூசகுலத்தினருக்கு இப்பெயர் ஏற்பட்டது


தமிழ் இலக்கன நுல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம். தொல்கபியதினை எழுதிய தொல்காப்பியர் வாழ்ந்த காலம் கி.மு 500. தொல்காப்பியத்திற்கு முன்பு தமிழில் பல இலக்கன நுல்கள் இருதன. அத்தகைய பழமையான இலக்கன நுல்களில் கூறப்பட்ட முறைகளயும் தொல்காப்பியர் எடுத்துக்காட்டி என்று புலவர்கள் கூறுவார்கள் என பழமை நெறிகளை சுட்டியுள்ளார். இலக்கணம் என்பது இலக்கியம் தோன்றி வளர்த்து பிறகு வகுக்கப்படும் நெறிமுறை ஆகும். இலக்கணம் வாழ்வியலை தழுவி நிற்பதாகும். தொல்காப்பியர், தொல்காப்பியத்தில் எடுத்துக் காட்டிய இலக்கன பெயர்கள், கொங்கு வேளாளர் இனத்தில் இடம் பெற்றுள்ளன.

பூசன் குலம் - பூசன் : புறத்துறை - போர் இலக்கணம்
தழஞ்சி குலம் - தழஞ்சி : புறத்துறை - போர் இலக்கணம்

இலக்கனப்பெயர் - உண்மைச் சாதனையுடன் இணைத்து நிற்பது வியக்கத்தக்க இயல்பாகும். பூசன்குலத்தினறிக்கு "போருக்குப் பூசன்" என்ற அடைமொழி வழங்கி வந்துள்ளது. அச்சுதகளப்பாளன் என்ற களப்பிர சர்வாதிகாரி, தொண்டை மண்டலத்து முவேந்தர்களைப் போரில் சிறைபிடித்துக் கொண்டுபோய், ஆமூர் சிறைக் கோட்டத்தில் அடைத்து வைத்திருந்தான். பூச குலத்தினர் ஆமூர் சிறையை உடைத்து, முவேந்தர்களை விடுவித்து, அச்சுதகளப்பாளனை போரில் வென்று, 'அச்சுத தொண்டைமான்' என்ற பட்டத்தைப் பெற்றனர்.  



போருக்குப்பூசன் பொன்னி வளநாடன்
ஆருக்கும் அடங்காத தொண்டைமான்- பாருக்குள்
மூவர் முன்னே நின்று முறைமையுடன் சேவித்துத்
தாவென்ற தொண்டைமான்நீர்.
என்ற தனிபாடல், பூசன் குலத்தாரின் ஆதிநாள் சாதனையைக் குறித்துள்ளது.பூசன் குலத்தாரின் கொங்கு நாட்டின் தென் பகுதியில் மிகுதியாக சிறப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்.
களப்பிரர் என்ற இணத்தினர், சேர, சோழ மட்றும் பாண்டிய மன்னரை சிறைப்படுத்தி தொண்டை மண்டல ஆயட்சியை கைப்பற்றிக் கொன்டனர். இந்தக் களப்பிரர் மரபில் உதித்து, பிற்காலத்தில் தொண்டை மண்டலத்து ஆமூரை ஆண்ட அச்சுதகளப்பாளனை, காளமேகப் புலவர்
உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்றவொருகோடி
வெள்ளங் காலந்திரிந்துவிட்டோமே- தெள்ளுதமி
ழாமூர் முதலியரசர் பிர தானிஇருக்கப்
போமூரறியாமற்போய்
என்று பாடியுள்ளார். செங்கல்பட்டு- குமிழி- படுவூர் பகுதியான ஆமூர் கோட்டத்தை அச்சுத களப்பான மரபினர் நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள் ஆவர். தொண்டை மண்டல சதகம்
மோதிச்சிவந்த கவி காள மேக மொழிந்த வெண்பாப்
பாதிக்கு முந்திப் பரிசளித்தோன் களப்பாளனென்று
ஆதிக்கம் பெற்றணுமூர் முதலிய ரஇருப்ப
மாதிக்கெலாம் புகழ்கின்ற தொல்சீர் தொண்டை மண்டலமே
என்று குறித்துள்ளது, எனவே,களப்பிரர் வலிமையுடன் தொண்டை மண்டலத்தை ஆண்ட இனம் என்பது தெளிவு. களப்பிரர் இனத்தின் மாவீரன் அச்சுத களப்பாளன் மூவேந்தரைச் சிறைபிடித்தான். களப்பிரர் படையெடுப்பினுல் நாட்டையிழந்த தொண்டைமான் பூசன் குலத்தினர் உதவியை நாடினான். பூசன் குலத்தினர் படைதிரட்டி தொண்டை மண்டலத்து ஆமூரை தாக்கி, சிறையை உடைத்து மூவேந்தரை விடுவித்தனர். அச்சுத களப்பாளனை வென்று, தொண்டை மண்டலத்தை தொண்டைமான் வசம் ஒப்படைத்தனர். பூசன் குலத்தினர்க்கு அச்சுத களப்பாளனை வென்றதிற்கு அடையாளமாக "அச்சுத தொண்டைமான்" என்ற பட்டத்தையும் கொடுத்து, மேலும் பல பெருமைகளை அள்ளி அளித்து பெருமைப்படுத்தினான்.
கொங்குமண்டல சதகம- சிறையை உடைத்து மூவேந்தரை விடுவித்ததை,
கரையது மேல்கரை நாற்பத்தொன்னுரயிரம் கொண்ட கொங்கில்
சிறையது வாங்கிய தொண்டைமான் வந்து மூவர்சபை
திறையது வாங்கிய பூசணன் தொண்டைமான் செம்மலென
மரபது காத்து நிலை கொள்ளுவோன் கொங்கு மண்டலமே.
என்று குறித்துள்ளது.
பூச குலத்தானின் வீரத்தை மெச்சி வாதமரு(பகதூர் )என்ற பட்டம் கொடுத்தார்.எனவே,தொண்டைமான் அச்சுதராயர் பெயரால் வழங்கப்பட்ட அச்சுதத் தொண்டைமான் என்ற பெருமைப் பட்டத்தை பூசர்கள் தங்கள் பெயறுடன் இணைத்துக் குறித்துக் கொள்கின்றனர். இதனை,
சொல்லாண்மை திழ் சொற்றிடும் பூசர்எனவும்
சொற்புகழ் மூலனூர்பூச குலன் வாதுரு
தொண்டைமான் கொடுத்தது துணிந்து பார்சிங்கா
என்ற அலகுமலைக் குறவஞ்சி சிறப்பிக்கின்றது. பூசன் குலத்தினர் 1798 இல் ஆங்கிலத் தளபதிக்கு 150 வீரர்களை அளித்தார்களாம் . ஆவணம் கூறுகிறது . பெரிய புராணத்தில் பூசலார் புரணாம் இருப்பதை அறியலாம் . பொருளூர், மூலனூர் , புதுப்பை வாழ் பூசர்கள் மூவரும் சேர்ந்து உருவாக்கிய தொண்டைமான்புத்தூர் தற்போது தொண்டாமுத்தூர் எனபொயர் பெற்று வழங்குகிறது
கொங்கு மண்டல சதகங்கள்:(http://www.tamilvu.org/library/l5730/html/l5730ind.htm)பண்டைய நாளிலொன் னார்பஞ்சு போலப் பறந்தகலத்
திண்டிறல் காட்டிய காளையை நோக்கியச் செம்பியனுந்
தொண்டைமா னென்றுந் தனதுநற் பேருந் துரைத்தனமு
வண்டரை மீதினிற் பெற்றவ னுங்கொங்கு மண்டலமே.
http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=275
ஆதண்ட மாலை தனைச்சூடிச் சோழ னகளங்கன்செய்
தோதண்ட மாகச் சரம்விடுத் தானைத் துரத்தி வெட்டி
நீதொண்ட மானென்று பூசைதன் கோத்திர நிலைமை கண்டு
வாதொண்டமான் தொண்டமான் புகழ்சேர்கொங்கு மண்டலமே
(
பி..ம்) "சோழன் அகளகன் செய்", "சரம்விடுத்தான் முன் துரத்தி வெட்பு", சோழரகளங்கனுடன்',
(
பூசகுலம்)
யோசனை புரியுந் தேவா வமுர்தத்தை யும்பருக்கு
நேசமும் பூசனை செய்திட வேயுடல் நேர்பிளந்து
பூசைதான் செய்பவன் பூசைதன் கோன் செம்மம்
பூவெனவே வாசங் கமழ்விழி காட்டிடுவோன் கொங்கு மண்டலமே (பி..ம்) 'தேவாவமுதத்தை', 'பூசனை செய்பவன்', 'யோசனையேபுரி', 'கோன் செம்மல'தென்கரை நாட்டார்: கொத்தனூர் பெரிய கோத்திரம் மூலனூர் பூச கோத்திரம் http://kongupattakarars.blogspot.in/2011/03/2.html
அண்ட நாட்டார்: பொருளூர் பூச கோத்திரம் http://kongupattakarars.blogspot.in/2011/03/17.html



பூசன் குலத்தரின் பழமையான சாதனைகளை தொகுத்துக் கூறும் சமூக விருத்தம் அவர்களின் வீரதீரச் செயல்களை,
மண்டலம் புகழ் கொங்கு சமஸ்தானத்தோர் மெச்சவளமை பெற்றிட்ட சமூகம்
மன்னர் மன்னவனென்று கட்டியம் கூறவெ வரிசை பெற்றிட்ட சமூகம்
தொண்டை மண்டலந்தன்னில் குலோத்துங்க சோழனின் துரைத்தனம் பெற்றிட்ட சமூகம்
தோராத வெற்றி புனை ஆதொண்டைமான் கையில் துலங்கு முடி பெற்றிட்ட சமூகம்
தண்டமிழ் விளங்கவே பொன் ஊஞ்சல்மிகு வரிசை தானம் பெற்றிட்ட சமூகம்
தரணிதனில் விசநகரில் அச்சுத களப்பாளனை சமர் செய்து வந்த சமூகம்
தெண்டிறை கடல்பரவு சீர்காழிதன்னில் செழித்து வந்த சமூகம்
சிறைமீட்டு தொண்டைமாரசன் என்றே செயம் பெற்றிட்ட சமூகம்.

என்று பூசன் குலத்தாரின் பழம் பெருமையைப் பழம்பாடல் பரணி பாடியுல்லது.

ஏழு நூற்றுவன் மண்றாடியார்(கண்ணந்தை கூட்டம்)

ஏழு நூற்றுவன் மண்றாடியார்(கண்ணந்தை கூட்டம்): Elite Regiment in medival Chola "Parantaka-Kongavalar" contains 700 people regiment from kongu.has power All Over Chola captured places as High Govt Chola officials (பிரம்மதேய மகாசபையாரையே தண்டிக்கின்ற ஆற்றல் படைத்த படைப்பிரிவாக இது இருந்ததெனத் திருவிடைமருதூர்க் கல்வெட்டால் தெரியவருகிறது.) .. from (900 AD - 1250 AD).. These guys are helped in chola raise ..

930/940 AD kalvettu:

முதல் பராந்தகனின்(901 AD -950 AD) திருவிடைமருதூர்க் கல்வெட்டில் . "கொங்கு ஸ்ரீகார்யம் ஆராய்கின்ற உயர் அலூவலன் காரி நக்கன் என்பான் குறிகப்படுகின்றன்."
ஸ்ரீகார்யம்--- ‘ஸ்ரீகார்யம் செய்வார்’ ஆலயங்களிலும், சமயம் தொடர்பான காரியங்களிலும் ஈடுபட்டனர். தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் ஸ்ரீகார்யம் செய்பவராக இராசராசன் காலத்தில் நியமிக்கப்பட்டவர் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியன்ஆன தென்னவன் மூவேந்த வளோன் என்பவன்.
திருவிடைமருதூர்க் கல்வெட்டில்"
"கொற்றக்குடை பன்மை எழுநூற்றவரும் கொங்கவாள் எழுநூறும் (ஆவணம்- 2:6-8)"
"உடையார் படை கொங்கவாளாரை விடைவிட்டுக் கடையீடும் குடுத்த"(south indian incription volume 5 723)
கொடும்பாளூர் இருக்குவேளிர் வம்சத்தைச் சேர்ந்த மகிமாலயன் என்பவன், பராந்தக சோழனால் (கி.பி. 907-953) பராந்தக வீரசோழன் என்ற பட்டப் பெயர் வழங்கப் பட்டுக் கொங்கு நாட்டுச் சிற்றரசனாக நியமிக்கப் பட்டான். இவன் பூதி விக்ரம கேசரியின் மகன் எனக் கருதப்படுகிறது. இவனது வம்சத்தவர் ‘‘கோனாட்டார் என்ற பெயரில் மூன்று நூற்றாண்டுகள் கொங்கு நாட்டை ஆண்டனர். இவர்கள் கொங்குச் சோழர் என்றும் 13 ஆம் 'நூற்றாண்டில் கொங்குப் பாண்டியர்(had matrimonyal aliences with pandya and kongu pandyars) என்றும் அறியப்படுவர். (kongu Cholar Vamsam Paithalai Gothirathu palla vellala gounders Konnnattan vikarama choliandar vamsam(கோனாட்டான் விக்கிரம சோழன்) in sevur செம்பியன் கிழான் நல்லூர் (சேவூர்) ஆறு நாட்டார்  வணங்காமுடி இம்முடி வீரவிக்கிரம கரிகால சோழியாண்டாகவுண்டன். இவர்கள் செம்பியன் மாதேவி அண்ணன் வம்சத்தவர்கள். ராஜராஜன் சோழ சாம்ராஜ்யத்தின் ஆணிவேர் செம்பியன் மாதேவியாவார்.)மூலபல கொற்றவாள் எழுநூற்றுவர் என்ற அரசகுல வாட்படை வீரர்களைப் பராமரித்து வந்தனர்.கோனாட்டு இருக்குவேள் மரபினரின் ஆட்சியில் இப்படை ‘‘பராந்தகக் கொங்கவாளர்” எனப் பெயர் மாற்றம் பெற்றது.முதல் இராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தில் சோழநாட்டிலிருந்த இப்படைப்பிரிவினர் ‘‘உடையார் படைக்கொங்கவாளர்” என அழைக்கப்பட்டனர்.

975 AD kalvettu காரிநக்கன் son kalvettu(nadukal) At Karur( கரூர் அருகே உள்ள, சணப்பிரட்டி):


கரூர் அருகேயுள்ள சணப்பிரட்டியில் கொங்குநாட்டுப் படைத் தலைவர் விஜயமண்டுகனின் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தஞ்சாவூர் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் கழக உறுப்பினர் கி. பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் - திருச்சி நெடுஞ்சாலையிலுள்ள சணப்பிரட்டி கிராமத்தில் ரயில் நிலையத்தின் மேற்கே 100 மீ. தொலைவில் சாலையின் தெற்குப் பக்கம் ஒரு நடுகல் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில், 975 யுவ வருடம் 31 ஆம் தேதி சோழநாட்டை ஆண்ட உத்தமச் சோழன் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு எனத் தெரியவந்தது.உத்தமச் சோழன் சோழநாட்டை ஆண்டபோது கொங்கு நாடும் அவரது ஆட்சிக்குள்பட்டிருந்தது. அதன் சிற்றரசனான நக்கனின் மகன் விஜயமண்டுகனுக்காக நடப்பட்ட நடுகல்லாகும் அது.
கொங்கு நாட்டை உத்தமச் சோழன் ஆண்டபோது காரி நக்கன் பெருந்தரவு சிற்றரசனாக இருந்தார். இவரது மகனாகவும், சிறந்த போர் வீரனாகவும் விளங்கிய விஜயமண்டுகன் ஈழ நாட்டில் நடந்த போருக்கு கொங்கு படைக்குத் தலைமையேற்றுச் சென்று அதில் வீரமரணம் அடைந்ததன் நினைவாக இந்த நடுகல் எழுப்பப்பட்டுள்ளது. மூன்றே வரிகளில் எழுதப்பட்ட வட்டெழுத்து கல்வெட்டில் அதன் கீழ் அஷ்டமங்கல சின்னங்களான கொடுவாய், அரிவாள், கோடாரி, உடுக்கை, அங்குசம், கவரி, வில்அம்பு, குறுவாள், சூரியன், நங்கூரம் போன்ற சின்னங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த நடுகல்லை ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் கொடுவாகால்சாமி என்ற பெயரில் வணங்கி வருவதோடு, பூஜைகள் மற்றும் விழாவும் எடுத்து படையலிட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார் அவர்.(70 % kongu vellala gounder in that ur .. Kannathai, perungudi, maniyan , kaadai , venduvan, vilaiyan, etc.. kootam are there .. Kannathai & mannian kootam do poojai .. and All Kongu vellalar go to the temple .. While on marriage ceremony time they go & visit nadukal,mainly there kannathai ,mannian, & perukudi kootam)
வட ஆற்காடு மாவட்டம் காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் காணப்படும் சுந்தரச் சோழனின் கல்வெட்டு ஒன்று அவ்வூர்க் கோவிலுக்கு நிரந்தரமாக விடப்பட்ட சாவா மூவாப் பேராடுகள் தொண்ணூற்றையும் பரிபாலிக்க ஏற்றுக் கொண்ட அதிகாரிகளுள் ஒருவராக கொங்கு வேளாளர்களூள் கண்ணந்தை குலத்தை சேர்ந்த ஏளு நூற்றுவன் மன்றாடி என்பவனின் பெயரைக் குறிப்பிடுகிறதுhttp://temple.dinamalar.com/en/New_en.php?id=1393
கோதைமங்கலமான மடிகட்டளத்திலிருக்கும்(ராணுவ பாசறையில்) வெள்ளாளன் வீர நாரயணன் "மூலபல படை வளவன்" செம்பியன் காமிண்டன் - ARE 1905 S.no:711 -1002 AD Palani

1009 AD



உத்தமசோழக்காமிண்டன்( தீரன் சின்னமலையின் முன்னோர்கள்) 953 A.D-

கொங்கு வேளாளர் சமுதாயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குலத்தார் உள்ளனர். அதில் பயிரகுலமும் ஒன்று. கொங்கு வேளாளர் மரபில் பயிர குலத்தில் பழைய கோட்டை சர்க்கரை மன்றாடியார் வழியில் தோன்றியவர் சின்னமலை. இம்மரபினர் உத்தமக்காமிண்டன், சர்க்கரை, மன்றாடியார், பட்டக்காரர் என்ற பட்டங்களையும் சிறப்புப் பெயரினையும் பெற்றவர்கள். பயிர்த்தொழிலிலில் புதுமை செய்தவர்கள் தான் பயிர குலத்தவர். படியளந்து உண்ணும் பயிர குலம்’’என்று ஒரு செப்பேடு புகழுகிறது. இதன் மூலம் இவர்களது வள்ளல் தன்மையை நன்றாக அறிய முடிகிறது.
வளர் பயிரன், ‘நீடுபுகழ் பயிரன், ‘கியாதியுள பயிரன்’’என்று காணிப்பாடல்களில் புகழப்படுகின்றனர். காராள ராமன்’’என்றும் புகழப்பட்டவர்கள் இக்குலத்தவர்கள். வேளாளரில் இராமனைப் போன்றவர்கள் என்பது அதன் பொருள்.
953 A.D:
பழைய கோட்டைப் பட்டக்காரர்கள் உத்தமக்காமிண்டன் எனும் கௌரவப் பட்டப் பெயர் பெற்றது மிகவும் சுவையான ஒரு வீர வரலாற்றுச் செய்தியாகும். முன்பு சந்துரு சாதன பாண்டியன் என்கிற பாண்டிய மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கும் சோழநாட்டை ஆட்சிபுரிந்த உத்தமக்காச் சோழன் என்பவனுக்கும் பகை ஏற்பட்டுப் போர் மூண்டது. பாண்டிய நாட்டின் மீது படையெடுத்த போரின் முனைகள் அனைத்திலும் சந்துரு சாதன பாண்டியன் கடும் தோல்வியடைந்தான். பாண்டியனின் படைத்தலைவர்கள் ஒருவன் பின் ஒருவராகச் சென்று சோழனிடம் தோற்று திரும்பினார்கள். இத்தோல்வியை அவமானம் எனக்கருதிய பாண்டிய மன்னன் பெரிதும் வருந்தித் துடித்தான். எதிரியைப் போர்க்களத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று நினைத்து நினைத்து துன்பக் கிணற்றில் வீழ்ந்தான். அப்பொழுது பாண்டியனின் படைத்தளபதியாக கொங்கு மண்ணைச் சேர்ந்த கரியான் என்கிற பிள்ளை சர்கரை முன்வந்து அரசே நீங்கள் கவலைப்பட வேண்டாம். தங்களுக்காக எதையும் செய்யும் என் போன்ற படை வீரர்கள் தங்களிடம் இருக்கையில் தாங்கள் கவலைப்படுவது எதற்கு?
சோழர் படையை நான் வென்று, கொன்று, அடியோடு அழித்து வெற்றிவாகை சூடி வருகிறேன் என்று சூளுரைத்து கடைசியில் போர்க்களம் புறப்பட்டான். முதலிலில் மித்திரன் என்பானைக் கொண்டு சோழன் ஏவியிருந்த புதவலிலியைக் கரியான் அழித்தான். பின் கடும்போர் புரிந்து சோழனை வென்று அவனது சோழ நாட்டுக்கே அடித்துத் துரத்தினான். பாண்டியனின் படையில் தலைவனாக இருந்து பணியாற்றிய கரியான், உத்தமக்காச் சோழனைப் போரில் வென்றான்.
அப்போது கரியான் உறந்தைப் பாக்கம் என்னும் இடத்தில் குடியிருந்தான்.
இவனது வெற்றியை உறந்தைப் பாக்கம் குடியிருந்தோர் முன்னோர் உத்தம சோழனை வென்று வந்தார்’ ‘ஆறெல்லாஞ் செந்நீர் ரவனியெல்லாம் பல்பிணங்கள் தூறெல்லாஞ் சோழன் கரிகுஞ்சி வீறுபெறு கன்னிக்கோன் ஏவலிலினாற் காரைக்கோன் பின்தொடரப் பொன்னிக்கோன் ஓடும்பொழுது’’என்ற பாடல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பாண்டியன் மகிழ்ந்து, உத்தமக்காச்சோழனை வென்றதால்உத்தமக்காமிண்டன்””என்ற பட்டத்தைச் சூட்டி காரையூரை (ஈரோடு காங்கேயத்திற்கு இடையில் உள்ள) தலைநகராகக் கொண்ட கொங்கு நாட்டிற்குத் தலைவனாக நியமித்தான். காரையூருக்குத் தென்கிழக்கில் உள்ள ஆனூர் என்ற ஊரில் அரண்மனையைக்கட்டி கொங்கு நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். இந்த ஆனூர் அரண்மனைதான் இன்று பழைய கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
சோழனைத் தன் வீரத்தால் வென்றதற்காக கரியானுக்குப் பாண்டியன் முடிசூட்டினான். இவ்வீரச்செயலை,
கலிலிஇரு நூற்றதில் விளம்பியின் மீனத்தில் கார்புரந்த
மலிலிபுகழான கரியான் செயமாது வலிலிமையினால்
புலிலிதுசன் உத்தமக்காச் சோழன் ஏவிய பூதவலிலி
தொலைவுசெய்து எரிபுகச் செழியன்தன் னால்முடிசூடினனே’’
என்ற பழம்பாடல் விளக்குகிறது.
பாண்டியனின் வேப்ப மாலையையும், மீன்கொடியையும் பரிசாக கரியான் பெற்றான்.
இவ்வீர வெற்றியின் நினைவுப் பரிசாக கரியான் சர்க்கரைக்கு காரையூர், வள்ளியறச்சல், முத்தூர், மருதுறை கிராமங்களும், பாப்பினியில் பாதிக்கிராமமும் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. பாண்டியனின் மகன்போல, வாரிசுகள் போல குமாரவர்க்கமாக பழைய கோட்டை மரபினர் கௌரவத்துடன் சிறப்பிக்கப்பட்டனர்.

உத்தமச் சோழன், உத்தமக்காச் சோழன் என்ற பட்டம் பெற்ற சோழனை வென்ற காரணத்தால் உத்தமச் சோழன், ‘உத்த மக்காச் சோழன்’’என்ற பட்டப் பெயரை கரியான் பெற்றான். இப்பட்டம் உத்தம சோழக்காமிண்டன்’’என்று  நத்தக்காடையூர் செயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டால் அறிய முடிகிறது. காலப்போக்கில் இப்பட்டத்தில் உள்ள சோழன் என்ற பெயர் மறைந்து உத்தமக்காமிண்டன்என்று மாறிவிட்டது. காமிண்டன் என்றால் காப்பாற்றுவதில் வல்லவன் என்று பொருள். இக்காமிண்டன் என்ற பெயரே பின்பு கவுண்டன் என்று மருவியது.

"காங்கய நாட்டுக் கரையூரில் வெள்ளாளப் பயிறர்களில் கொற்றன் உத்தமசோழக் காமிண்டன் அழகப் பெருமாள் உத்தமசோழக் காமிண்டன் "

"காங்கய நாட்டுக் கரையூரில் வெள்ளாளப் பயிறர்களில் அழகன் உத்தமசோழக் காமிண்டன் கரியான் உத்தமசோழக் காமிண்டன்"




1251 A.D:
கொங்குநாடு பல ஆண்டுகளாக சோழ வேந்தர் ஆட்சியில் இருந்தது. ஆடல், பாடல்களிலும் கணிகையர் வலையிலும் வீழ்ந்து கிடந்த பிற்காலச் சோழ அரசர்களால் சோழர் ஆட்சி நலிவுற்ற காலகட்டத்தில் பாண்டிய அரசன் ஜடாவர்மன் படைத்தளபதியாக கொங்கு வேளாளரில் பயிரகுல காரையூர் சர்க்கரை என்ற துடிப்பான இளைஞன் ஒருவன் இருந்தான். அக்காலகட்டத்தில் சோழர் படைவீரர்கள் அடிக்கொருமுறை கொங்குமண்டலத்தில் படையெடுத்துப் புகுந்துகொண்டு கொள்ளையடித்தும், கொலைசெய்தும் கொங்குநாட்டு மக்களுக்குப் பெரும் துன்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வந்தனர். கொதித்தெழுந்து இதைத்தடுத்து நிறுத்த காரையூர் சர்க்கரை குதித்தோடி முன்வந்தான். பாண்டிய மன்னனின் அனுமதியுடன் சோழமன்னனை நேரில் கண்டு அரசே, தங்களது முன்னோர்கள் பாதுகாத்துவந்த இக்கொங்குநாட்டை உங்கள் படைவீரர்கள் கொள்ளையிடுகிறார்கள். இது தருமம் ஆகாது, இது நீதியாகாது. அன்புகூர்ந்து, கருணை கூர்ந்து கொள்ளையடிக்கும் படைகளை கொங்கு மண்ணிற்குள் நுழையவிடாமல் திரும்பிப் போக வேண்டும் என்று ஆணையிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டான். இதை சோழ மன்னன் ஏற்றுக்கொள்ளாமல் கடும்கோபம் கொண்டான்.
இனிப்பொறுத்துக் கொள்ள முடியாது என்று எண்ணி தனது படையுடன் சென்று சோழர் படையை அடியோடு விரட்டித் துரத்தித் துரத்தி அடித்தான். கி.பி. 1251ஆம் ஆண்டு இச்சம்பவம் நடைபெற்றது. வெற்றி பெற்றுத் திரும்பிய தனது தளபதியைப் பாராட்டி வாழ்த்தி பாண்டிய மன்னர் நல்ல சேனாதிபதிஎன்ற கௌரவப் பட்டம் அளித்துப் பாராட்டினான். இம்மரபினர் பழைய கோட்டையில் இன்றும் நல்ல சேனாதிபதிஎன்ற பட்டத்துடனும், பெரும்புகழுடனும், மக்கள் செல்வாக்குடனும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வரலாற்றுச் செய்தியை மிகவும் இனிமையான பழம்பாடலில் இருந்து தெளிவாக அறியலாம்.
கி.பி.12-ஆம் நூற்றாண்டில் கொங்கு 24 நாடுகளுக்கும் தலைவராக இந்த சர்க்கரை மரபினர் பட்டம் சூட்டப்பட்டனர். அதிலிருந்து சர்க்கரை மரபினருக்குபட்டக்காரர்””என்றும் பெயர் வழக்கத்திற்கு வந்தது.
24 நாடுகளிலும் புகழ்கொண்ட கொற்றவேல் சர்க்கரை அரண்மனையில் அன்னக்கொடியும், மேழிக்கொடியும் கட்டி ஆட்சி அதிகாரம் செலுத்தியவர். ஆனூரிலிலிருந்த பழையகோட்டை பட்டக்காரர் மரபினர் தற்பொழுது நொய்யல் நதிக்கரையில் உள்ள அரண்மனையைக் கட்டிக் குடியேறியது இவர் காலத்தில் தான். அவர் பட்டாபிடேகப் பாடல் அவர் பெருமையையும், புகழையும் காட்டுகிறது. நத்தக்காடையூர் செயங்கொண்ட நாதர் திருக்கோயிலில் பெரும் திருப்பணி செய்தவர். அரும்பாடுபட்டு அக்கோயிலில் சிவன் தீபத்தம்பத்தை நிறுவியர். இத்தீபத்தம்பத்தின் தென்மேற்குத் தூணில் இவர் உருவச்சிலை உள்ளது. இவர் தலைசிறந்த கவிஞர். இக்கோயில் அம்மன் நல்லமங்கை மீது இவர் ஒரு சதகம் பாடியுள்ளார். அச்சதகத்தின் சில பாடல்கள் கிடைத்துள்ளன.
சடையபெருமாள், அருணாச்சல வாத்தியார், சம்புலிலிங்க ஒதுவார், கார்மேகக் கவிஞர் போன்றவர்கள் இவரைப் புகழ்ந்து பாடியுள்ளனர். இவர் மிகச்சிறந்த பக்தர். பழநியில் இவர் மடம் இன்றும் உள்ளது. சர்க்கரை மடம் என்று அதற்குப் பெயர். ஒரே நாளில் குதிரைச் சவாரி செய்து கொங்கேழு சிவாலய தரிசனம் செய்த பெருமை உடையவர். கருவூர், வெஞ்சமாங்கூடல், கொடுமுடி, அவினாசி, பவானி, திருச்செங்கோடு, திருமுருகன் பூண்டி என்பன கொங்கேழு தலங்களாகும்.

                    
       ஆணூர்ச்சர்க்கரை பாண்டியனால் பட்டம்பெற்றது
(55)
ஆணூர் புரக்கவும் விக்கிரமன் கோட்டை யழிக்கச் சொட்டை
வீணூர் புரக்கவும் உத்தம சோழனை வென்றனென்று
தாணூர் புரக்கின்ற சர்க்கரை பாண்டியன் றந்தபட்டம்
வாணோர் புரக்கக் கலிதடுத் தான்கொங்கு மண்டலமே.
        கரியான் சர்க்கரை வெண்ணை மலையில் வீரர்
                    குறும்படக்கியது
(56)

கரியான்சொற் சர்க்கரை பெற்றது முத்தமக் காமிண்டன்றான்
குரியான சொட்டையில் வீரரை வென்று குறும்படக்கிச்
சரியாய் நிறுத்திடும் வெண்ணைநன் மாமலைச் சார்பினிற்றான்
வரிவாழை சூழ்ந்தனை வோர்களும் வாழ்கொங்கு மண்டலமே.

With out fail read Another two .. Kongu mandala staka padal (57,58)
http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=182 
With out fail read Another two .. Kongu mandala staka  Page 60-67..Fully about sakarai
http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?pno=60&bookid=101     or Read full there 8 or more songs about sakarai  in 3 sathakamகொங்கு மண்டல சதகங்கள் (http://www.tamilvu.org/library/l5730/html/l5730ind.htm )many many Big titled kongu vellala gounders kulam variyaga songs wrote there 

காமிண்டன்,கவுண்டன்

கொங்கு வேளாளத் தலைவர்கள் சிலர் ஆளும் தலைவர்களாலும்
அரசர்களாலும் காமிண்டன் என்ற சிறப்பு பெயர் பெற்றனர்.ஒருவர்
பெற்ற பட்டப் பெயரை அவர் சந்த்தியர்களும் பெயர்களுடன் சேர்த்துக்
கொண்டனர்.காலப் போக்கில் காமிண்டன் என்ற பெயர் கவுண்டர் என்றாகிச்
சமூகம் அனைத்திற்கும் உரியதானது.
மிண்டன் என்றால் வலிமையுடையவன்,பலசாலி,திறமை மிகுந்தவன்
என்பது பொருள்.செப்பேடுகளில் அரசர் புகழ் மொழிகளாக வண்டர்க்கொரு
மிண்டன் தண்டுவார் மிண்டன் என்ற தொடர்கள் காணப்படுகின்றன.
நல்லதம்பிசக்கரையாரை பாடிய புலவர் வீரபத்திரகவிராயர் புலவர்கலுக்குத்
தொண்டா,கசடர்கட்கு மிண்டா என அவரை அழைக்கிரார்.
கா என்றால் பாதுகாப்பு.,காப்பாற்று என்று பொருள்.கா,மிண்டன் என்ற இரு
சொற்களையும் சேர்த்துக் காமிண்டன் என்ற பட்ட்த்தை சிலர் பெற்றனர்.
உத்தமசோழனை வென்ற காரணித்தினால்(953 A.D) பாண்டிய மன்ன்ன் பழைய
கோட்டைப் பட்டகார்ர் ஒருவருக்கு உத்தமகாமிண்டன் என்ற பட்டப் பெயரை
கொடுத்தான்.அம்மரபில் வந்த பட்டகார்ர்கள் அனைவரும் அப்பட்ட்த்தை
தங்கள் பெயரோடு இணைத்துக் கொண்டனர்.
செல்லகுல இருப்புலிச் சேருமான் உலகப்பகவுண்டருக்கு விசயநகர
மண்ணன் முதலிக் காமிண்டன் என்று பட்டப் பெயர் கொடுத்தான்.அவர் வழி
வந்த பருத்திப் பள்ளி செல்லகுலத்தார் பலர் முதலிக் காமிண்டன் என்றப்
பெயரைப் பெற்று விளங்கினர்.பிற்காலத்து வந்த பருத்திப் பள்ளி இராமையா
கவுண்டரை ஒரு புலவர்
“முதலிக் காமிண்டன் முழுமதி வதணன்
பருத்திநன் னாடன் பண்பன் சீயலான்
கருத்துக்கு இசைந்த கல்வி இராமையன்” என்றுபாடுகிரார்.
பிற்காலத்தில் பலர் காமிண்டன் என்ற பெயரைப் பெற்று விளங்கினர்.
கொங்கு நாட்டில் அப்பட்டம் பெற்ற அனைவரும் கொங்கு வேளாளர்களே
என்பதில் ஐயமில்லை.(There are many many more kamidan kalvettu belongs to kongu vellala gounder , we listed below only few example)

கன்னகுல பட்டக்காரர் - இம்முடி அத்தப்ப நல்லதம்பி காங்கேயர், மோரூர் பட்டக்காரர்.



கோதைமங்கலமான மடிகட்டளத்திலிருக்கும்(ராணுவ பாசறையில்) வெள்ளாளன் வீர நாரயணன் "மூலபல படை வளவன்" செம்பியன் காமிண்டன் - ARE 1905 S.no:711 - Palani 1002 AD


வீர்ராசேந்திர தேவர்க்கு யாண்டுபதினாலவ்து மழைநாட்டு வலிபுரத்து வெள்ளாளக்குடிகளில் காமிண்டன்(குன்னமலை)



கழஞ்சியரில் சிங்க காமிண்டன்


“விண்ணப்பள்ளியான அபிமான சோழ நல்லூர் வெள்ளாளன் மருத காமிண்டன்”(அவிநாசி)

“இராக்குரல் காமிண்டன்”(பொய்மான் கரடு)

“வடபரிசார நாட்டு நம்பி பேரூரில் வெள்ளாளன் கழஞ்சியரில் காமிண்டன்”(நம்பியூர்)

“வெள்ளோடு சாத்தந்தைகளில் வீரசசோழக் காமிண்டன்”(வெள்ளோடு)

“நிர்மணியூர் வெள்ளாளரில் மன்றாடி பாண்டியக் காமிண்டன்”(பொன்னிவாடி)

“கொற்ற மூக்கன் ஏகவீர மாராயன் மகன் பட்டில் மன்றாடி மூக்கன் சாத்தனான

இராசேந்திர சிங்க காமிண்டன்”(காங்கயம் பாளையம்) -1017 AD


“காமிண்டன் பொன்ன காமிண்டனான ஊராண்டான்”(மல்லூர்)

“அழகிய சோழக் காமிண்டன்”(சங்கிராம நல்லூர்)

“பராந்தக்க் காமிண்டன்”(பனைமரத்துப் பட்டி)

“அரையண் காமிண்டன் விக்கிரமன்(பேரூர்)

“பெருந்தொழுவில் பெரிய பிள்ளை காமிண்டன்”(ஈரோடு)

“காமிண்டனான மாணிக்கச் சந்திரன்”(பிடாரியூர்)

“செய்யான் குன்ற காமிண்டன்”(தாரமங்கலம்)

தொடக்கத்தில் அர்சனோடும்,ஆட்சி உரிமையோடும் தொடர்புடைய
இப்பெயர்
முதலி, முதலிக்காமிண்டன் என்ற பெயரைப் பலர் பெற்றிருந்தனர்.

அவிநாசி முதலியான சோழ நாராயணக் காமிண்டன் (மூல குலம்)

இளமன் முதலி (ஆந்தை குலம்)

கஞ்சப்பள்ளி வெள்ளாளன் முதலி பொத்தி (வெள்ளாளன்)

சிலம்பன் முதலி (பொருளந்தை குலம்)

பருத்திப்பள்ளி முதலி கஞ்சமலைத் தேவன் (செல்ல குலம்)

பருத்திப்பள்ளி முதலி கண்ணுவான் ஆண்டை (செல்ல குலம்)

பூமி காமிண்டன் முதலிக்காமிண்டன் (செல்ல குலம்)

மின்னாம்பள்ளி முதலிகளில் பெரியபிள்ளையாண்டை (தூர குலம்)

முதலிகள் அத்தாணிக் காமிண்டர் (செல்ல குலம்)

முதலி வீரன் (கொற்றந்தை குலம்)

பட்டி கோவனான மண்டல முதலி (விச்சர் குலம்)

எல்லோருக்கும் பொதுப் பெயராகி கவுண்டர் என்றாயிற்று.

• நம்பிபேரூரில் வெள்ளாளன் முக்கண் ஆண்டான்

• இலத்தூரில் வெள்ளாளன் கொங்கன் கோப்பிளான்

வெள்ளாதி வெள்ளாளன் நக்கன்.

• கஞ்சப்பள்ளியில் வெள்ளாளன் முதலிப் பொத்தி.

• துறவலூர் வெள்ளாளன் சொக்கன்.

• கூவலூர் வெள்ளாளன் நக்கன்

• கருப்பூர் வெள்ளாளன் காவனூர் உடையான் மானிக்கவாசகன்.

• அன்னூர் வெள்ளாளன் தேவன் பொத்தி

• அபிமான சோழநல்லூரில் வெள்ளாளன் மருதகாமீண்டன்
மருதூர் வெள்ளாளன் நக்கன்

• கருவலூர் வெள்ளாளன் பட்டியான்

• கூவலூர் வெள்ளாளன் கம்பன்

வடபூவாணிய நாட்டு கச்சிப்பள்ளிக் காமிண்டன்(பூவாணிய நாடு கொங்கு 24 நாடுகளை ஒன்று , பூவாணிய நாட்டு பகுதி உள்ள ஊர் ,கொங்கணாபுரம் ஒன்றியம் கச்சிப்பள்ளி ஊராட்சி.கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் செல்லன் மற்றும் பனங்காடை குலத்தின் காணி யூர் , அவர்களின் கணிபாடல் குறிக்க பெற்று உள்ளனர் .பூவாணிய அட்சியளர்கள் ஜமீன்  ,பாளையகரர்கள் அனைவருமே  கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்.
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=256372&cat=504
http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=219
http://kongupattakarars.blogspot.in/2011/03/12.html
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_24_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

"ஈஞ்சனுக்கு எங்கும் காணி"-ரகுநாதசிங்க கவுண்டர்

ஈஞ்ச கூட்டம் மாவீரரை பெற்றெடுத்த கூட்டம்... ரகுநாதசிங்க கவுண்டர்.. கிழக்கே ராசிபுரம், அத்தனூர் வரை.. மேற்கே கோவை தொண்டாமுத்தூர், நீலாம்பூர் வரை.. வடக்கே செவியூர், சிறுவலூர் வரை.. தெற்கே பழனி வரை என கிட்டத்தட்ட கொங்கதேசத்தையே திக்விஜயம் செய்தவர்... 

திருக்காம்புலியூரில் தோரணம் கட்டி, மதுக்கரை செல்லாண்டியம்மனுக்கு பூசை போட்டு, கிராதகாதி ஜாதியரை போர் நடத்தி வென்று 88 காணிகளை வென்றவர்..!! "ஈஞ்சனுக்கு எங்கும் காணி" என்று பேர் பெற்றுத் தந்தவர். அந்த மாவீரருக்கு இன்று உருவ வரைபடம் கூட இல்லை. ஈங்கூரை ஆதியாகக் கொண்டவர். இன்று பல பட்டக்காரர்கள் உரிமை கொண்டாடும் நாடுகள் எல்லாம் இவர் முதன்முதலில் சத்ருக்களிடம் இருந்து வென்று சேரனிடம் காணியுரிமை வாங்கியவைதான். எனவே இந்த காணிகளில் இன்றளவும் முதல் உரிமை கொண்டாடும் தகுதி ஈஞ்ச கூட்டத்தாருக்கே உள்ளது!






நீலம்பூரில் வேணாவுடையாரால் அடக்கமுடியாமல் இருந்த வேட்டுவர் விஜய காளிராய கவுண்டரை அடக்க ரகுநாத சிங்கக் கவுண்டரை வேண்டிக் கேட்டுக் கொண்டார் வேணாவுடையார். ரகுநாதசிங்க கவுண்டர் படைகளைச் சேர்த்து போர் தொடுத்து வெற்றி கொண்டார். அந்த நன்றிக்காக நீலம்பூர்க் காணியை ஈங்கூர் ஈஞ்ச கூட்ட ரகுநாத சிங்க கவுண்டருக்கு அளித்தார்.
ஈஞ்ச கூட்ட ரகுநாத சிங்க கவுண்டர் மீது பல தனிப்பாடல்கள் உள்ளன. இவற்றை ஈங்கூர் ஈஞ்ச கூட்ட பெரியவர்கள் பலர் வைத்திருக்கிறார்கள். ரகுநாதசிங்க கவுண்டர் வரலாற்றை சொல்லும் ஈங்கூர் ஈஞ்ச குல செப்பேடும் தற்போது அவர்களிடம் உள்ளது. வாய்மொழியாக இருந்த பாடல்கள் சில கீழே






ரகுநாதசிங்ககவுண்டர் கொங்கு மக்களின் போற்றப்படாத ஹீரோ. அதிகம் அறியப்படாத மாவீரர். ஈங்கூர் கோயிலில் அவருக்கு ஒரு நினைவு சிலை, அவர் உருவ வரைபடம் போன்றவை வைக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அனைத்து கொங்கு நிகழ்ச்சிகளிலும் தீரன் சின்னமலை, காளிங்கராயர் போன்று வணக்கத்திற்குரியவராக கொங்கதேச வீரத்தின் வெற்றிச் சின்னமாக போற்றப்பட வேண்டும்.

தகவல் மூலங்கள்
ஈஞ்ச குல செப்பேடு
நீலம்பூர் காணி செப்பேடு
கொங்கு வேளாளர் குல வரலாறு



பாரதவர்ஷத்தில் ஐம்பத்தியாறு தேசங்கள் உள்ளனதேசம் என்பது socio-climatic unit ஐக்குறிக்கும்இயற்கை அரண்கள் ஒவ்வொரு தேசத்துக்கும்எல்லைகளாக உள்ளனசேர அல்லது கொங்க தேசத்துக்கும் மலைசூழ்ந்த எல்லைகள் உள்ளனஇவ்வெல்லைகளுள் micro – socioclimatic unit களும்உள்ளனஇவை நாடுகள் என்று வழங்கப்படுகின்றனஅன்னியர்களால் அன்னியமுறையில் அமைக்கப்பட்ட இன்றைய சர்க்கார் AC அறையில்அமர்ந்துகொண்டு தாந்தோன்றித்தனமாக இவற்றைப் பிரித்திருப்பினும்இயற்கைபண்பாடுவாழ்க்கைமுறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டநாட்டுப்பிரிவுகள் என்றும் நமது வாழ்க்கையின் வழியாக உள்ளனநிலையான அமைதியான வாழ்வு (இதனையே சனாதன தர்மம் என்றும் sustainable livingஎன்றும் ஆழைத்து வந்துள்ளோம்இருந்திட இம்முறை பல்லாயிரம் வருட பரிணாம வளர்ச்சிக்குப்பின் உருவானதாகும்நீர் நிலைகள் பராமரிப்பு(அணைக்கட்டு – உதாரணம் நொய்யல்அமராவதிபவானிதிருமணிமுத்தாறுகாவேரி அணைகள் போன்றவைஏரிகள் – உதாரணம் பூந்துறை,வெள்ளோடுந்சியனூர்எழுமாத்தூர் ஏரிகள் முதலியவைகுளங்கள்குட்டைகள்வாய்க்கால்கள் – காலிங்கராயன்தடப்பள்ளிஅரக்கன்கோட்டை,இருட்டணை முதலானவைகிணறுகள்தீர்த்தங்கள்தெப்பக்குளங்கள் – ஈரோடுபெருந்துறை தெப்பக்குளங்கள் போன்றவை - , தடாகங்கள்முதலியவை ,பண்பாட்டினைப் பாதுகாத்தல் (தர்மங்கள்,சமுதாய கூட்டுக்குடும்ப அமைப்புகள்கலைகள்இலக்கியங்கள்கோயில்மடம்சத்திரங்களைப் பாதுகாத்தல்,மரங்கள் நடுதல்கால்நடைகள், நாட்டு வித்துக்கள் தயார் செய்தல்) - .

கொங்கதேசத்தினை 24 நாடுகளாகப் பிரித்துள்ளனர்ஒவ்வொரு நாட்டிற்கும் பிராமணர்களிலிருந்து சாம்புவன் வரை 18 குடிகள் உள்ளனர்ஒவ்வொருகுடிக்கும் தனித்தனியே ஊர்த்தலைவர்கள் முதல் பட்டக்காரர்கள் வரை உண்டுஇவர்கள் தத்தமாது குடிகளைக் கட்டிக்காத்து வந்துள்ளனர்இதற்குஜாதிப்பஞ்சாயம்சமிதி அல்லது ஆயம் என்று பெயர்இவர்களுக்கு மேல் ஒவ்வொரு நாட்டிற்கும் பெரிய வீட்டுக்காரர்நாட்டுக்கவுண்டர்பட்டக்காரர்,நாட்டார்காராளர்எஜமானர் என்று அழைக்கப்படும் நாட்டுப் பட்டக்காரர்கள் இருந்து வந்துள்ளனர்இப்பெயர்கள் அனைத்தும் ஒரே பொருளையேகுறிக்கின்றனஇவர்கள் சபை (மன்றம்நடத்தி வந்தனர்இதனால் மன்றாடி (மன்றம் + ஆடி) என்று பெயர் பெற்றனர்இவர்கள் நாட்டு சபைக்கும்அனைத்துஆயங்களுக்கும் தலைவர்கள்இது நிர்வாக அமைப்பாகும்துருக்கர் காலத்தில் இதனை நேரடியாக அழிக்க முயன்று தோற்றனர்பிறகு கிறிஸ்தவஆங்கிலேயர்கள் இதனை அழித்தாலோகைபற்றினாலோதான் கொள்ளையடிக்க முடியும் என்பதனைப் புரிந்துகொண்டு இன்று வரையில் வெவ்வேறுவழிகளில் சுதேசி ஆட்சிமுறைகளை இன்றுவரை அரித்தெடுத்து வருகின்றனர்.

நாட்டார்கள் புலால் மறுத்தல்கள்ளுண்ணாமைதீயன பேசாதிருத்தல்அறுபத்திநான்கு கலைஞத்துவம்பெண்களுக்கு சம உரிமைகள் (குதிரையேறுதல்,மன்றம் – சபை நாட்டாண்மை முதலியவை), குருபக்திதெய்வபக்தி போன்ற தனித்தன்மையுடன் உள்ளனர்இவை இவர்களை காணியாளகுடியானகவுண்டர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

குறிப்புஇது துருக்கர்களால் ஏற்படுத்தப்பட்ட ஜமீன்தார்தாசில்தார்மன்சப்தார்தாலுக்தார்இனாம்தார் முறைகளல்ல,
விஜயநகரத்தாரால் ஏற்படுத்தப்பட்ட பாளையக்காரர் முறையுமல்ல,
வெள்ளையர்காளால் மாற்றியமைக்கப்பட்ட பாளைய பட்டக்காரர் முறையுமல்ல (feudal lords).
ஆதியில் சேரமான் ஏற்படுத்திய சங்ககால முறை. கடைசி சேரலான உலாச்சேரல் (சேரமான் பெருமாள் நாயனார்) கைலை செல்லும் முன் தன் கீழ் பெரிய பட்டமான பூந்துறை நன்னாவுடையார் வம்சத்தினரான வேலப்ப நயினான் என்பவரை கொங்க தேசத்திற்கும் அதன் கீழிருந்த கர்னாட தேசம், மலையாள தேசம், கேரள தேசம் ஆகிய தேசங்களுக்கும் தான் வரும்வரை அதிகாரியாக திருவாஞ்சைக்களத்தில் நியமித்துச் சென்றதாக வரலாறு.

 இன்றும் சேரமானது வாரிசுகள் தாராபுரத்தில் உள்ள வஞ்சியம்மன் கோயில் பூஜை முறைகளைச் செய்து வருகின்றனர். 

நாட்டார்கள், காணியாளர்கள், குடியானவர்கள்:
பூர்வீகமாக நாட்டை ஆள்பவர்கள் நாட்டார் எனவும், பிற நாட்டகத்தே போயினும், காணிகள் பெற்று காணியிலேயே வாழ்பவர்கள் காணியாளர்கள் எனவும், காணிகளை விட்டுப் பெயர்ந்தவர்கள் குடியானவர்கள் எனவும் பிரிந்துள்ளனர். இன்றும் இக்குணாதிசயங்களைப் பரக்கக் காணலாம். சென்ற தலைமுறை வரையில் ஜாதகம், செல்வத்தினைவிட இப்பிரிவுகளே முக்கியமாக இருந்தன. பணம், செல்வாக்கினை மட்டுமே மணதில் கொண்டு தற்கால திருமணங்கள் செய்யப்படுவதாலேயே விவாக முறிவுகள் ஏற்படுகின்றன. காரணம் நாட்டார், காணியாளர், குடியானவர் என்ற சனப்பிரிவுகளை கடந்த ஒரு தலைமுறை மதியாமையாகும். சாதி ஒன்றாயினும் சனம் வேறு. 

மழ கொங்கினில் நாட்டார் - குடியானவர் பிரிவு இன்றும் உள்ளது. ஆகவே அப்பகுதியில் விவாக முறிவுகள் குறைவாகவே உள்ளன.


பழமையைப் பாதுகாப்போம்
எறக்குறைய 2 ஆயரம்ஆண்டுகளாக  பொறிக்கப்பட்டு அழியாமல் நின்று நிலவி,காலமாறுபாட்டால்சில அழிவுகளைப் பெற்றிருப்பினும் நம் முன்னோர் வாழ்வியல் நெறியை நமக்குக் காட்டும் இக் கல்வெட்்டுக்கள் நம் சமுதாயத்தின் மாபெரும் சொத்தாகும்.
இந்த எழுத்துக்கள் மூலமாக நம் முன்னோர்க்களைக் காணுகின்றோம் அவர்களோடு நேரில் ஊரையாடுகின்றோம் .நீங்களும் நாங்கள் காட்டிய அறவழியில் நடந்து மிகப் பெரிய புண்ணியத்தையும்,புகழையும் பெறுங்கள் என்று அவை நமக்குக் கூறாமல் கூறுகின்றன.
 நமது சமுதாயப் பெருமக்களின் சமய ஒருமைப்பாடு,சமூக ஒருமைப்பாடு,குல ஒருமைப்பாடு,சமுதாய வாழ்வு ,சமய நம்பிக்கை, கோயில் வழிபாட்டுக்கும்,திருப்பணிகட்ளும்,விழாக்களும் கொடுத்த கொடைகள்,கிணறுகள வெட்டி தண்ணீர்பந்தல்கள் வைத்து சுமைதாங்கி நிறுவி ,நீர் நிலைகளைப்பாதுகாத்துச் செய்த பொதுப்பணிகளள் அவர்கள் பொருளாதார நிலை, செல்வச் செழிப்பு,வேளாண்மை

பணியாளர்களை மதித்துப் பணிகொள்ளும்  தன்மை,முன்னோரிடத்தும்,அவர்கள் செய்த அறச்செயலிடத்தும் கொஒண்டிந்த பற்று,பெண்களுக்குக் கொடுத்த சம உரிமை,பொது வாழ்வில் பெண்கள் பெற்ற பங்கு.குடும்ப ஒற்றுமை இவைகள் பற்றிய முன்னோர் செய்திகளை நமக்கு அறிவிக்கும் ஒரே ஆதாரம் இக்கல்வெட்டுக்கள் தான்.

கோயில் ஜிஹாத்
திருப்பணி ஆர்வத்தால் நம் முன்னோர்களே கல்வெட்டுக்களில் அருமை தெரியாமல் பலவற்றை  அழித்துவிட்டார்கள் .இன்றும் பல ஊர்களில் அந்த நிலை தொடர்வது மிகவும் வருத்தத்துக்குரியது.இனியும் அழிவு எற்படாவண்ணம் அவைகளைப் பாதுகாப்பது நம் கடமையாகும்

WITH OUT FAIL READ THIS PAGE

கொங்கு வேளாளர் வரலாற்றுச் சுருக்கம்
கொங்கு நாட்டின் மண்ணின் மைந்தர்கள் கொங்கு வேளாளர்கள், குலக்காணியூர், குலதெய்வம், குலகுரு, காணிப்புலவர்கள் பெற்று வாழ்ந்த ஒரே சமுதாயம் தமிழகத்தில் கொங்குச் சமுதாயம் ஒன்றேயாகும்.ஊருக்குக்கொத்துக்காரர், நாட்டுக்குப் பட்டக்காரர், சடங்கு கட்குஅருமைக்காரர்ஆகியோரை நியமித்து நீதிநெறிக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த சமுதாயம் கொங்குச் சமுதாயம்.
WITH OUT FAIL READ THIS குலகுரு:http://kongukulagurus.blogspot.in/
WITH OUT FAIL READ THISகாணிப்புலவர்கள்:http://kongupulavanars.blogspot.in/
2000 ஆண்டுகட்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் வேள்என்றும் வேளிர்என்றும் சிறப்பிக்கப்பட்டவர்கள் வேளாளர்கள். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேஎன்பது உலக வழக்கு. உயிரனைய உழவுத் தொழிலை வேளாளர்கள் செய்வதால் வேளாண்மைஎனப்பட்டது. வேளாண்மை’  என்ற சொல்லுக்கு உழவுத் தொழிலால் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள்களை தாமும் உண்டு பிறர்க்கும் அளிக்கும் உபகாரத்தைச் செய்பவர்கள்.
வேளாளர்கள்தொல்குடி, தொன்முதிர்குடிஎன்று குறிக்கப்பட்டனர். தமிழக மூவேந்தர்கட்கு மகட்கொடை கொடுக்க உரிமை படைத்தவர்கள் வேளாளர்கள். அரசர்கட்கு முடிசூட்டும் உரிமை படைத்தவர்கள்.
கொங்கு வேளாளர்கள் நாடு, மக்கள், கால்நடை ஆகியவற்றைக் காப்பவர்கள் என்ற பொருளில் காமிண்டர் என்ப்பட்டப் பெயர் பெற்றனர். காமிண்டர் என்ற பெயரே காலப்போக்கில்கவுண்டர்என்று மாற்றம் பெற்றது. கொங்கு வேளாளர்கள் 96 கீர்த்திகள் படைத்தவர் என்பர். கொங்கு வேளாளர் குலங்களில் பல பெயர்கள்  தமிழக மூவேந்தர்களையும், சங்க காலச் சிற்றரசர்களையும் நினைவுப்படுத்தும் பெயர்களாக உள்ளது சிறப்புக்குரியதாகும்.
சேரன், வில்லி, வில்லம்பர், அந்துவன், பனையன்சோழன், நேரியன்பாண்டியன், வேம்பன், மீனவன் ஆகிய குலப்பெயர்கள் தமிழக மூவேந்தரோடு தொடர்பு உடையவை. பதுமன், பண்ணன், மலையர், காரி என்ற குலப் பெயர்கள் சங்க காலக் குறுநில மன்னர்கட்குரிய பெயர்களாகும். தொடர்பு எதுவும் இல்லாமல் குலப் பெயர்கள் அமையாது. எனவே, கொங்கு வேளாளர் வரலாற்றுச் சிறப்பு ஆராய்வதற்கு உரியதாகும்.
மூவேந்தர்களின் ஆட்சி நிலைக்கக் கொங்கு வேளாளர்கள் பேருதவி புரிந்துள்ளனர். காலிங்கராயன், பல்லவராயன், தொண்டைமான், கச்சிராயன், மூவேந்தவேளான், வாணவராயர், காடவராயன் என்ற உயர் பட்டப் பெயர்கள் கொங்கு வேளாளர் தலைவர்கட்கு அரசர்களால் அளிக்கப்பட்டுள்ளன. கொங்கு வேளாளர் சமூகத் தலைவர்கள் மீது பாடப்பட்ட இலக்கியங்கள் பல. கொங்கு வேளாளர் பெரும்புகழ் கூறும் கல்வெட்டுகள், செப்பேடுகள், பட்டயங்கள் பலப்பல. மேற்கண்ட அனைத்தும் குடத்துள் இட்ட விளக்காகவே உள்ளன. இவற்றை உலகறியச் செய்ய வேண்டும்.
தூய பழக்க வழக்கமும், உயர் பண்பாடும், ஒழுக்கமும், கட்டுப்பாடும், நேர்மையும், வாய்மை தவறாமையும் உள்ள சமுதாயம் கொங்கு வேளாளர் சமுதாயம். நாடுகள் பிரித்து எல்லைகள் வகுத்து தலசுய ஆட்சி முறையை அன்றே நடைமுறைப்படுத்திய சமுதாயம் கொங்குச் சமுதாயம். அதன் சிறப்புக் கருதி கொங்கு நாட்டை வென்று அடிமைப்படுத்திய பிற அரசர்கள் கூட அந்த நாடு’ ‘நாட்டார்அமைப்பை மாற்றவில்லை. தங்களுக்கென்று மேழிக்கொடிபடைத்து, தாங்கள் கூடும் அவைக்குசித்திரமேழிச் சபைஎன்று பெயரிட்டு ஆவணப்படுத்திய பெருமக்கள் கொங்கு வேளாளர் பெருமக்கள்.
பதினெட்டு வகையான குடிபடைகளை ஆதரித்து சமய விழா, சமுதாய விழா, குடும்ப விழாக்களில் அனைவரையும் பங்கு கொள்ளச் செய்து தாராளமாக அவர்கட்குத் தானியம் வழங்கிபகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிபொதுவுடைமைச் சமுதாய வாழ்வை நடைமுறைப் படுத்தியது கொங்குச் சமுதாயம். பொதுவாக அவர்களைப் பணி மக்கள்என்று மக்கள் உரிமையோடு அழைத்தது கொங்குச் சமுதாயம்.
கொங்கு நாட்டின் மண்ணின் மைந்தர்கள் கொங்கு வேளாளர்கள், குலக்காணியூர், குலதெய்வம், குலகுரு, காணிப்புலவர்கள் பெற்று வாழ்ந்த ஒரே சமுதாயம் தமிழகத்தில் கொங்குச் சமுதாயம் ஒன்றேயாகும்.ஊருக்குக்கொத்துக்காரர், நாட்டுக்குப் பட்டக்காரர், சடங்கு கட்குஅருமைக்காரர்ஆகியோரை நியமித்து நீதிநெறிக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த சமுதாயம் கொங்குச் சமுதாயம்.
சமய நல்லிணக்கத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும் உயிர் மூச்சாகக் கொண்டவர்கள் கொங்கு வேளாளர்கள். அவர்கள் வழி படும் குப்பியண்ணன், சாம்புவன் தாழ்த்தப்பட்டவர்கள்.
காடு கொன்று, நாடாக்கி, குளம் தொட்டு, வளம் பெருக்கி, கோயில் எடுத்துப் பல இடங்களில் குடியேறிப் பல்கிப் பரந்து பெருகி வாழும் சமுதாயம் கொங்குச் சமுதாயம். தாங்கள் முன்னோர்களைப் போற்றி வழிபடும் சமுதாயம் கொங்குச் சமுதாயம். கொங்குச் சமுதாயம் பற்றி தமிழகத்தில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் வெளிநாட்டிலும் உள்ள ஆய்வாளர்கள் பலர் ஆய்ந்து பற்பல கட்டுரைகளும், நூல்களும் எழுதியுள்ளனர். அவர்களில் சிலர் கீழ்க்கண்ட கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
கொங்கு வேளாளர்கள் நல்ல தேகபலம் உடையவர்கள்; மிகக் கடினமாக உழைக்கக் கூடியவர்கள்கொங்கு நாட்டார் இனம் மற்ற நாட்டு மக்களை விட வேறு பட்டதாகவே இருக்கும். சொல் ஒன்று வெட்டு ஒன்று என்றே இருப்பார்கள்தங்கள் குடும்பத்திற்கோ, குலத்திற்கோ வரும் இழிவைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். உயர்ந்த கட்டுப்பாட்டுடன் இயங்கிய சமூகம்’ ஒரு புலவர் வேளாளர்களைப் புகழ்ந்து பாடிய புலவர்களைத் தொகுத்துக் கூறுகிறார்.அவர்களுள் கம்பரே முதலிடம் பெறுவதையும் காணுகிறோம்.அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
கம்பர்செந் தமிழும் இரட்டையர் மொழிந்த
கட்டளைக் கலித்துறைக் கவியும்
கனிந்ததெள் ளமிர்தம் எனப்புக ழேந்தி
களித்திடும் கலம்பகத் தமிழும்
பண்புசீர் ஒட்டக் கூத்தனாம் புலவன்
பகிர்ந்திடும் பைந்துளா யிரமும்
பசுந்தமிழ் தேறு வாணியர் தாசன்
பரிவுடன் புகன்றசெங் கவியும்
செம்பியன் கவியும் வழுதிமார் கவியும்
சேரமான் செப்பிய கவியும்
தேவர்தன் சிறையை மீட்டவேள் குமரன்
தெளிவுற இசைத்தவெண் பாவும்
சம்பந்தர் கவியும் அவ்வைதன் தமிழும்
சங்கத்தார் செப்பிய தமிழும்
தவத்தினால் மிகவும் புகழ்கொண்ட வேளாளர்
தகைமையைச் சாற்றுதற்கு எளிதோ
கங்காகுலம்-கொங்க வெள்ளாளர்:http://gangakulam.blogspot.i/

கொங்கு வெள்ளாளன்.
பிரிவு-ஆறை நாடு, ஒருவங்க நாடு முதலிய 24 நாடுகள்.
அந்துவன், ஆதி முதலிய 60 குலங்கள்.
தலைவன் பட்டம் - நாட்டுக் கவுண்டன், பட்டக்காரர், மன்றாடியார்
குலப்பட்டம் - கவுண்டன்.
காமிண்டன் - கவுண்டன். மிண்டு = வலிமை. மிண்டன் - வல்லோன். காமிண்டன் = காவலன், தலைவன்.
காமிண்டன் - காவண்டன் = கவண்டன்-கவுண்டன்.

குறிப்புகள்

  1. Jump up http://www.sify.com/news/it-s-all-about-caste-in-tamil-nadu-polls-news-columns-ldwwufjhhai.html
  2. Jump up http://www.maalaimalar.com/tnelection/Constituency.aspx?constID=104
  3. Jump up http://www.dinamalar.com/News_Detail.asp?Id=201527
  4. Jump up http://frontlineonnet.com/fl2516/stories/20080815251611400.htm
  5. Jump up http://articles.timesofindia.indiatimes.com/2009-05-21/chennai/28179309_1_poll-observers-assembly-polls-poll-eve
  6. ↑ Jump up to:6.0 6.1 பாலகிருஷ்ணன், ஆர் பாலகிருஷ்ணன். (ஜூலை 2010). "சிந்துவெளித் தமிழ்ப் பெயர்கள்". திணமணி.
  7. Jump up [http://books.google.co.in/books?ei=pxr1TOi0CY3KrAf1-ZH0Bg&ct=result&id=VlFjAAAAMAAJ&dq=kongu+vellala&q=totem+name+even+now+current+among+kongu+Vellalas&redir_esc=y#search_anchor | totem name even now current among kongu VellalasIndus script among Dravidian speakers,Irāman̲ Mativāṇan̲, N. Mahalingam, International Society for the Investigation of Ancient Civilization,International Society for the Investigation of Ancient Civilizations, 1995 - Foreign Language Study
  8. Jump up பாலகிருஷ்ணன், ஆர் பாலகிருஷ்ணன். (ஜூலை 2010). "சிந்துவெளித் தமிழ்ப் பெயர்கள்". புதுகைத் தென்றல்.
  9. Jump up "கல்வெட்டுக்களில் கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்கள்" by கட்டுரையாளர் : சு.இராசவேலு Rajavelu, S கட்டுரையாளர் பணி : Epigraphical Assistant, Archaeological Survey of India, South Zone, Madras கட்டுரைப் பிரிவு : Epigraphy - கல்வெட்டியல் ஆய்விதழ் எண் : 036 - December 1989 பக்கங்கள் : 067 - 074,read page 73 of this PDF
  10. Jump up [[1]]
  11. Jump up [[2]]
  12. Jump up [[3]]
  13. Jump up "கல்வெட்டுக்களில் கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்கள்" by கட்டுரையாளர் : சு.இராசவேலு Rajavelu, S கட்டுரையாளர் பணி : Epigraphical Assistant, Archaeological Survey of India, South Zone, Madras கட்டுரைப் பிரிவு : Epigraphy - கல்வெட்டியல் ஆய்விதழ் எண் : 036 - December 1989 பக்கங்கள் : 067 - 074,
  14. Jump up "பல்லவர் செப்பேடுகள் முப்பது". பதிப்பகம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் புத்தகப் பிரிவு : தொல்லியல் ஆய்வு பதிப்பு : இரண்டாம் பதிப்பு(1999) (1999).
  15. Jump up "Thirty Pallava copper plates (prior to 1000 A.D.).". பதிப்பகம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் புத்தகப் பிரிவு : தொல்லியல் ஆய்வு பதிப்பு : இரண்டாம் பதிப்பு(1999) (1999).
    1. மண்ணுக்குள் மறையும் முன்னோர் வீரம்: சிதிலமடையும் வரலாற்று சின்னம்http://www.dinamalar.com/news_detail.asp?id=843274
    2. n 1970 International Institute of Tamil Studies; report submitted to the UNESCO, by A. Subbiah, Member-Secretary, Managing Committee on his visiting mission to fourteen countries with an UNESCO grant. http://www.worldcat.org/title/international-institute-of-tamil-studies-report-submitted-to-the-unesco/oclc/00393636
    3. http://books.google.co.in/books?lr&hl=fr&id=rWRkAAAAMAAJ&dq=velir+velalar&q=velalar&redir_esc=y#search_anchor and "also note that tamil nadu govt symbol" "The Vēļāļar of the Tamil country (the descendants of the Vēļir) have retained the honorific till this day in their names (c.f gavundan and 'gouņder' "
    4. http://books.google.co.in/books?lr&hl=fr&id=rWRkAAAAMAAJ&dq=velir+velalar&q=pandyas#search_anchor here they says kings are all velir , (i.e kongu vellala gounder )
    5. http://en.wikipedia.org/wiki/Kongu_Vellalar
    6. KONGU VELLALA GOUNDER WIKI
    7. kongu vellala gounder history
    8. kongu vellala gounder history in tamil